இன்றைய ராசி பலன் – 25-6-2020

rasi palan - 25-6-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய காரியங்கள் வெற்றியில் முடியும். ருமண முயற்சிகள் சாதகமாக நிறைவேறும். பணி மாற்றம் பதவி மாற்றம் போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அகலும். விநாயகருக்கு எருக்கம் மாலை சாற்றி வர தொழிலில் லாபம் காண்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அனுகூலத்தை உரத்தை தரக்கூடிய நாளாக அமையும். வெகு நாட்களாக நிலவிவந்த கடன் பிரச்சினைகள் தீரும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள சூழல் ஏற்படும். சிவன் வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகளை தீர்க்கும் நாளாக அமையும். புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பழைய சொத்து பிரச்சினைகள் தாமதமாக வாய்ப்பு உண்டு. சுற்றத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குருபகவானை வழிபட்டு வர செல்வ அனுகூலம் காண்பீர்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமான நாளாக அமையும். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். தொழில் புரிவோர் தங்களின் கீழ் பணி புரிவோர் உடன் அனுசரித்துப் போவதால் நல்ல திருப்திகரமான சூழல் உண்டாகும். துர்கை அம்மனை வழிபட்டுவர மன சஞ்சலங்கள் அகலும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள சூழல் ஏற்படும். அரசு துறையில் பணி புரிபவரகள் சக ஊழியர்களிடம் ஆதரவைப் பெறுவர்கள். தொழில் புரிவோருக்கு நல்ல அனுகூலம் உண்டாகும். ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக உழைக்கக் கூடிய நாளாக அமையும். புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பழைய சொத்து பிரச்சினைகள் தாமதமாக வாய்ப்பு உண்டு. சுற்றத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதிபராசக்தியை வணங்கிவர சுபிட்சம் உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிகுந்த நாளாக அமையும். திருமணத் தடைகள் நீங்கி சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தொழில் லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கருட பகவானை வணங்கி வர நிலையான பொருளாதார சூழல் உருவாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமோகமான நாளாக அமையும். தொழில் புரிவோருக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். இழுபறியில் இருந்த பண பிரச்சனைகள் தீரும். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் மிகுந்த நாளாக காணப்படும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் ஆதரவை பெறுவீர்கள். பணம் வரவு செலவு அக்கறையுடன் இருப்பது நல்லதுமுருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர தடைகள் நீங்கும்.

மகரம

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் நாளாக அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். முருகப் பெருமானை வணங்கி வர மன அமைதி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. சிறு குறு தொழில் முனைவோருக்கு பொருளாதாரத்தில் ஏற்றங்கள் ஏற்படும். குரு பகவானை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் காண்பர்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகமாக ஏற்படும் நாளாக அமையும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வரும். எதிலும் சிந்தித்து செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும். புதிய வீடு மனை வாங்க வாய்ப்புண்டு. நந்தி பகவானை வழிபட்டு மன சஞ்சலங்கள் விலகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -