இன்றைய ராசி பலன் – 27-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
தந்தை வழி உறவுகள் வருகையால் வீண்செலவுகள் உண்டாக்கு. புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளித்தூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். முக்கிய முடிவுகளை குடும்பத்தில் ஆலோசனை செய்த பிறகு எடுப்பது நல்லது.சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
உற்சாகமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் அசைகளுக்காக கேட்டதை வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும்.

மிதுனம்:
Midhunam
தன்னபிக்கையுடன் இருப்பிர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலம் உண்டாகும். எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து விலகும். அலுவலக சார்ந்த பணிகளால் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாக்கும். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

கடகம் :
Kadagam
அனுகூலமான நாள். சகோதரர்கள் வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். திடீர்பயணம் மேற்கொள்வீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

சிம்மம்:
simam
கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண்செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. அலுவலக சார்ந்த பணிகளால் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

கன்னி:

வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் மகான்களின் ஆசி பெறுவீர்கள். சகோதரர்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். புதிய ஆடை,ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் விற்பணை பாதிக்கப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கலுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

வழக்கமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகும். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகம் சார்ந்த பணிகளால் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

விருச்சிகம்:

அனுகூலமான நாள். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி தருவீர்கள். சகோதரர்கள் வருகையால் எடுத்த காரியங்கள் அனுகூலமாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்துங்கள். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள்.

தனுசு:

மனதில் இணைபுரியாத மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவர்கள். நண்பர்களால் வின்செலவுகள் உண்டாகும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக அமையும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

மகரம்:
magaram
சிலர்க்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளால் தேவையில்லாத பிரச்சைனைகள் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களை நம்பி பொறுப்புகள் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பணை சுமாராகத்தான் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பாரத பணம் வந்து சேரும்.

கும்பம்:

உடல் ஆரோகியதில் அக்கறை செலுத்துங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மாகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மீனம்:

மகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். அலுவலக பணிகள் சற்று கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் கூடுதலாக இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -
- Advertisement -