- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசி பலன் – 24-10-2019

இன்றைய ராசி பலன் – 24-10-2019

- Advertisement -

மேஷம்:

mesham

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

- Advertisement -

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

rishabam

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

Midhunam

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களால் சில நல்ல திருப்பங்களும் ஏற்படக்கூடும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்:

Kadagam

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

சிம்மம்:

simam

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

கன்னி:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

துலாம்:

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

தனுசு:

உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மகரம்:

magaram

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளைத் தொடங்கினால் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்:

இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். தேவையான அளவுக்குப் பணம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.

மீனம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

சற்று முன்