இன்றைய ராசி பலன் – 28-05-2021

rasi palan - 28-5-21

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் பெறுவது இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு இருக்கும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நாம் ஒன்று நினைக்க தோன்றும் நடக்கும் என்பது போல அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. ஆரோக்கியம் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான அக்கறை தேவை.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் நீண்ட நாள் கேள்விகளுக்கான பதில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவியிடையே அன்பை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறக்கும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் கோபமே உங்களுக்கு எதிரியாக மாறக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டு. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க பெரும். ஆரோக்யம் சீராக இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களை உடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் முன் நின்று செய்யும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு மற்றும் உதவி கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் புரிதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டுத் தேவைகளை எளிதாக போது செய்வீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பெருந்தன்மை கண்டு மற்றவர்கள் வியப்பார்கள். வாடிக்கையாளரின் இடத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சகோதர சகோதரிகளிடையே இருந்த ஒற்றுமை மேலும் வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு கணிசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையான எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நட்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரத்தில் அனுகூலமான பலன்களை காணலாம். சிலருக்கு எதிர்பாராத விஷயத்தில் அனுபவம் புதிதாக கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் கலையும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த காரியத்திலும் நல்ல விஷயங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கடினமாக உழைக்க வேண்டிய காலமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டிய நேரத்தில் சரியாக கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்கள் உடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிலை அதிகாரிகள் பாராட்டும் வண்ணம் நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை.