இன்றைய ராசி பலன் – 31-01-2018

12-rasi

மேஷம்:
mesham
புதிய முயற்சியில் ஈடுபடும்போது பல முறை யோசித்து செயல்படுத்துங்கள். இன்று தெய்வ பக்தியுடன் காணப்படுவீர்கள். இன்றைய தினம் மனதில் உற்சாகம் பெருகி ஓடும். அலுவலகத்தில் இன்று பணிச்சுமையால் சோர்வாக இருக்கக்கூடும், இருந்ததாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் சுமாராக தான் இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கைக்கு வரவேண்டிய பணம் தாமதமாக வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam
குடும்பத்தாரின் ஆலோசனையில் இன்று மேலோங்கி நிற்பீர்கள். அரசாங்க அதிகாரிகளால் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தந்தை வழி சொந்தங்களால் பண வரவு இருக்கும். அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து அதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள். வியாபாரத்தில் வழக்கம்போல் விற்பனை இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும் பொது நிதானமும், பொறுமையும் கடைபிடிக்கவும்.

மிதுனம்:
Midhunam
இன்று இனிமையான நாள். அலுவலகத்தில் சாதகமான சூழல்லே காணப்படும். உங்கள் புதிய முயற்சிக்கு சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தாருடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடன் பிறந்தவர்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம் :
சிலர் குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பிறகு விலகிவிடும். தெய்வம் வழிபாட்டால் மன நிறைவு இருக்கும். வியாபாரம் எப்பொழுதும் போல் இருக்கக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை காரணமாக சற்று சோர்வாக காணப்படுவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது.

சிம்மம்:
simam
உங்கள் வாழ்கை துணையால் இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியம் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். வியபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கூடுதலாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்கை துணையின் வழியில் நல்ல செய்தி வரும்.

கன்னி:

இன்று ஆனந்தமான நாள். சகோதரர்கள் உங்கள் சிந்தைக்கேற்ற படி நடந்து கொள்வார்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் செலவு உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு அதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் எப்பொழுது போல விற்பனை இருக்கும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றி, அவர்களை மகிழ்ச்சியக பார்த்துக்கொள்வீர்கள்.

- Advertisement -

துலாம்:

குடும்பத்தாருடன் உறவினர்கள் வீட்டிற்கு செல்வீர்கள். சகோதரர்களால் வீண் செலவு ஏற்படும். தந்தை வழி உறவுகள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசு காரியங்களை சுமூகமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவ கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனை கூடுதலாக இருக்கும். இன்று பயணம் செய்ய நேரிடலாம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அலுவகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். தெய்வவழிபாடு அனுகூலம் தரும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு:

இன்று இனிமையான நாள். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கை துணையுடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்களை சுமுகமாக செய்து முடிப்பீர்கள். இன்று செலவுகள் அதிகரித்தாலும் பிறகு சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் இன்று ஏற்றம் இரக்கம் இன்றி முடியும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி மூலம் நல்ல செய்தி வரும்.

மகரம்:
magaram

இன்று உற்சாகமான நாள். அலுவலகத்தில் உங்கள் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் செய்து முடிப்பதில் தாமதமாகும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. வாழ்க்கைத்துணை உறவுகள் மூலம் நினைத்தை செய்து முடிப்பீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற வீண்செலவு ஏற்படும்.

கும்பம்:

அரசாங்க வழியில் எதிர்பார்த்த காரியம் சுலபமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அலுவலக பணிகளை சிறப்பாக செய்து, அதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். சகோதரர்களால் செலவு ஏற்படும். சிலர் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் .சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் இருக்க கூடும்.

மீனம்:

இன்று ஆனந்தமான நாள். புதிய முயற்சியில் ஈடுபடும்போது பலமுறை யோசித்து செயல்படுங்கள். அலுவலகத்தில் பணியை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பணம் வரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.