- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 31 ஜனவரி 2026

இன்றைய ராசிபலன் – 31 ஜனவரி 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். வார்த்தையிலும் கவனம் தேவை. அதிகம் பேசாமல் இருந்தால் இன்று வரும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். பெரியவர்களையும் உயர் அதிகாரிகளையும், அனுசரித்து செல்லுங்கள். இந்த நாள் நிதானத்தோடு செயல்பட்டால் பிரச்சனை இல்லை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். வேலைகள் வியாபாரம் எல்லாம் சுமூகமாக செல்லும். உறவினர்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். தேவையற்ற டென்ஷனில் இருந்து விடுபடுவீர்கள். பண கஷ்டம் நீங்கும். கடன் சுமை குறையும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களிடம் உதவி கேட்கும் போதும் கவனம் தேவை. ரொம்பவும் உங்களுக்கு நம்பிக்கை உரியவர்களிடம் சின்ன ஏமாற்றம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தனலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு பேசி, நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த நாள் நேரம் போவதே தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கவலைகள் இன்றி இன்று இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன உறுதியான நாளாக இருக்கும். தைரியமாக செயல்படுவீர்கள். எந்த விஷயத்திற்கும் பயம் இருக்காது. உயர் அதிகாரிகளை எதிர்கொள்வதாக இருந்தாலும் சரி, பெரிய மனிதர்களிடம் பேசுவதாக இருந்தாலும் சரி, உங்களிடம் இருக்கும் திறமை முழுமையாக வெளிப்படும் நாள் இன்று. நல்ல பெயர் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும். சோம்பேறித்தனம் இருக்காது. டென்ஷன் இருக்காது. மனது முழுவதும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாட்டில் நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை என்று ஜெயம். நீண்ட நாள் முயற்சி செய்தும், இந்த ஒரு நல்ல காரியம் மட்டும் எனக்கு நடக்கவே மாட்டேங்குது, அப்படின்னு ஏதாவது ஒரு விஷயம் இருந்தால், அதை இன்று கையில் எடுங்கள். நிச்சயம் கடவுள் உங்களுக்கு வெற்றியை கைமேல் கொடுத்து விடும். தடைபட்ட சுப காரியம் நிகழ்ச்சிகளை கூட மீண்டும் தூங்குவதற்கு இன்று பிள்ளையார் சுழி போடலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். பணக்கஷ்டம் இருக்கும். மாத கடைசியில் நிதி நிலைமையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை சில பேருக்கு உருவாகும். கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். கூடுமானவரை பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வேண்டும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க கூடாது. கைபேசி அதிக நேரம் பார்க்கக் கூடாது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். உங்களுக்கு ஆதரவாக நாலு பேர் பேசுவார்கள். உங்களுடைய பேச்சுக்கு நாலு பேர் மரியாதை கொடுப்பார்கள். சமுதாயத்தில் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கும் நாள் இன்று. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்துங்கள். மேலும் நன்மைகளை அடையலாம்.

சற்று முன்