இன்றைய ராசி பலன் – 31-07-2020

rasi palan - 31-7-2020
- Advertisement -

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். புதிய முடிவுகளை எடுக்க ஒரு நல்ல நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். குரு பகவானை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் காண்பர்.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். உறவினர்கள் வரியே நற்செய்திகள் வரும். தொழில் வகையில் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகள் வழியே மகிழ்ச்சி கிடைக்கும். வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும். நந்தி பகவானை வழிபட்டு மன சஞ்சலங்கள் விலகும்.

- Advertisement -

மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு முன்னேற்றத்திற்கான நாளாக அமையும். பிள்ளைகள் வழியிலும் மகிழ்ச்சி அடைவீர்கள். சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிரியும் நிதானத்தோடு செயல்படுவது நன்மை தரும். விநாயகப் பெருமானை வழிபட்டு வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய காரியங்கள் வெற்றியில் முடியும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. சுயதொழில் செய்வோர் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். மகாலட்சுமியை வழிபட்டு வர பண வரவு சீராக இருக்கும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அனுகூலத்தை உரத்தை தரக்கூடிய நாளாக அமையும். திருமண காரியங்கள் கைகூடி வரும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் லாபம் காண்பீர்கள். வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. சித்தி புத்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமான நாளாக அமையும். கடன் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். வாகன ஓட்டிகள் பயணத்தின்போது கவனம் தேவை. வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. முருகன் வழிபாடு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிகுந்த நாளாக அமையும். அலுவலகத்தில் பணி புரிவோருக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் புதிய முயற்சியை மேற்கொள்வதால் வெற்றி காண்பீர்கள். பிறரிடம் அளவாக பேசுவது நன்மை தரும். ஹயக்ரீவர் வழிபாடு சிறப்பை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமோகமான நாளாக அமையும். உறவினர்கள் வழியே ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அம்பிகையை வழிபட்டு வர தொழிலில் ஏற்றம் காண்பீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும். வியாபாரத்தில் நல்ல ஏற்றம் காண்பீர்கள்.மாணவர்களுக்கு நிலவி வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் அடைவீர்கள். கொடுத்த கடன்கள் திரும்பி வந்து சேரும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. காமாட்சி அம்மன் வழிபாடு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியடையும் நாளாக இருக்கும். சுற்றத்தாரின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிறரிடம் அளவாக பேசுவதால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். பணப்புழக்கம் நிலையாக இருக்கும். அங்காரகனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டால் நல்ல பலன் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு என்ற என்னால் அனுகூலமான நாளாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கணவன்-மனைவிக்கிடையே நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் வழியே அனுகூலம் உண்டாகும். லஷ்மி அம்மன் வழிபாடு செல்வ பலனை அளிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய நல்ல நாளாக அமையும். கடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புது வாகனம் வீடு மனை போன்றவற்றை வாங்க சூழல் ஏற்படும். சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். கங்கை அம்மனை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -