இன்றைய ராசி பலன் – 04-03-2020

rasi palan - 4-3-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகிறது. சுபகாரிய பேச்சுகளை தொடங்கலாம். ஆனால் எந்த ஒரு முடிவினை எடுப்பதற்கு முன்பும் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு, பணியில் சாதகமான சூழ்நிலை நிலவும். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய நாளாக அமைய போகிறது. உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படும். சொந்த தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பணவரவில் பற்றாக்குறை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். கல்வியில் மாணவர்கள் அதிக அக்கறை எடுத்து படிக்க வேண்டும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும். பிள்ளைகளை பெற்றோர்கள் கவனத்தோடு பார்ப்பது நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுனராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய போகிறது. கணவன்-மனைவிக்கிடையே அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். வீண் விவாதத்தை தவிர்த்துக் கொண்டால், குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் வருகையால் சில பிரச்சனை வர வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிக்க வேண்டும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த ஒரு நபரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வந்து சேர வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களுடன் சேர்ந்து செய்பவர்களாக இருந்தால் அவர்களுடன் உஷாராக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. திருமணப் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுப விரயம் ஏற்படக்கூடிய நாளாக அமைய போகிறது. வீட்டில் உறவினர்களின் வருகையால் சில செலவுகள் ஏற்படலாம். சமாளித்தாக வேண்டும். உறவினர்களிடையே சின்ன சின்ன பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அனுசரித்து செல்வது நல்லது. அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். வீண் விவாதத்தை தவிர்த்து கொள்வதால் மன அமைதி ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சற்று மந்தமாக இருக்கப்போகிறது. வருமானத்திற்கு எந்த குறைபாடும் இருக்காது. புதிய காரியங்களை தொடங்க வேண்டாம். அலைச்சல் ஏற்படும் என்பதால், நல்ல காரியத்தை நாளைக்கு தள்ளி வைப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். கணவன் மனைவிக்கிடையே சில சஞ்சலங்கள் வந்து மறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகிறது. உத்தியோகத்தில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். சொந்த தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். உடல்ரீதியாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. பெண்கள் தங்களுடைய குடும்ப விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைய போகிறது. வீட்டின் உறவினர்களின் வருகை மூலம் சந்தோஷமான சூழ்நிலை நிலவும்.  சொந்த தொழிலில் புதிய முயற்சிகளை கையாளலாம். வியாபாரம் முன்னேற்றத்தில் செல்லும். வேலைக்கு சென்று கொண்டு இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாகனத்தில் செல்லும் போது மட்டும் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். வீட்டில் இருக்கும் மூத்தவர்களை அவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய போகிறது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். மன உளைச்சல் ஏற்படும். ஓய்வு எடுத்துக் கொண்டால் மறுநாள் சரியாகிவிடும் என்று உற்சாகத்துடன் செயல்படுங்கள். வியாபாரம் வழக்கம்போல் செல்லும். வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவருக்கு நல்ல தகவல் வந்து சேரும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவர்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமைய போகிறது. எதிர்பாராத பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நாளைய தேவைக்கு பணத்தை எடுத்து வைப்பது நன்மையை தரும். அலுவலகத்தில், வேலையில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச் சந்தைகளில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். புதிய விஷயங்களை கற்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய போகிறது. பணவரவு சீராக இருக்கும். சொந்தத் தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பாராத ஒரு நபரின் மூலம் நல்ல செய்தி வர வாய்ப்பு உள்ளது கணவன்-மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய போகிறது. கணவன்-மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. நண்பர்களால் உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் அதற்கான நல்லபெயர் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். கவலை வேண்டாம். கூடியவிரைவில் நல்ல பெயரை வாங்கி விடுவீர்கள். பொருளாதாரத்தில் சற்று இழுபறி இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.