இன்றைய ராசிபலன் 08-03-2020

rasi palan - 8-3-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்தும் உயரும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் சேர்க்கையால் சில தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளில் லாபகரமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அம்பிகையை வழிபடுவதன் மூலம் நன்மை பெறலாம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் நாளாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்த நேரத்தில் நினைத்தபடி கைகூடிவரும் இனிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபம் உண்டு. எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் குதூகலம் காணப்படும். ஈஸ்வரனை தரிசிப்பது நன்மை தரும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன தைரியம் மேலோங்கி காணப்படும். வழக்கு தொடர்பானவற்றில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். மாணவர்களின் கல்வியில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் இருக்கும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் நன்மைகளை அடையலாம்.

கடகம்:
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய உத்வேகம் ஏற்படக்கூடிய இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனைகள் பெற்றோர்களுக்கு மேலோங்கி காணப்படும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்துசேரும். விநாயகரை துதிப்பது நன்மை தரும். சுற்றுலா செல்வதற்கான திட்டமிடல் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும் நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான நாளாக அமையும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவதன் மூலம் நன்மை கிடைக்கும் நிக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் விருத்தி உண்டாவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிட்டும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உங்களின் திறமைக்கேற்ற பலன்கள் கிட்டும் இனிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மற்றும் நண்பர்களின் ஆல் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விரட்டி காரணமாகவே பயணங்களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பயணங்களால் நன்மை கிடைக்கும் எனவே தைரியமாக மேற்கொள்ளலாம். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படலாம். திருமணப் பேச்சு வார்த்தைகள் தடங்கள் ஏற்பட்டாலும் வெற்றிபெறும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மனம் அமைதி பெறும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு மிகுந்த நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு தனவரவு திருப்திகரமாக இருக்கும். வாகன வகையில் ஒருசிலருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மூன்றாம் நபர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வது கூடாது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உயரும். தங்களின் நாணயமான நடவடிக்கைகளுக்கு உரிய பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான நாளாக அமையும். பூர்வீக சொத்துகள் மூலம் ஒரு சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களின் இரக்க சுபாவத்தை பயன்படுத்தி சிலர் ஏமாற்ற கூடும். எனவே கவனமுடன் இருப்பது நல்லது. பைரவர் வழிபாடு அமைதி தரும்.

மகரம்:
மகர ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும் நாளாக இருக்கும். பெற்றோர்களின் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிட்டும். மாணவர்களின் எதிர்காலம் குறித்த திட்டமிடலில் பெற்றோர்கள் ஈடுபடுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் சுய முடிவு எடுப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகள் பலன் தரும். நண்பர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் பரிபூரணமாக கிட்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அரசு வழி காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் காரணமாக சில உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். சகோதர சகோதரி வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளை கற்றுக் வாய்ப்புகள் கிட்டும். வேலையை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் குதூகலம் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனமாக இருக்க வேண்டும். மூட்டு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -