இன்றைய மேஷ ராசி பலன்கள் – 19.7.2018

667
Mesha rasi palan today
- விளம்பரம் -

இன்றைய பலன்

அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் உற்சாகம் ஏற்படவும் கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.


Click here for :  All Rasi Palan Today Nalla Neram Love Calculator Muhurtham Dates Marriage Matching


- Advertisement -

பொது பலன் :
மேஷம் ராசியினருக்கு இந்த ஆண்டு முழுவதும் பெரும்பாலும் நன்மையான பலன்களே ஏற்படக்கூடிய அமைப்பு இருக்கிறது. நீங்கள் தொடங்கும் எந்த ஒரு புதிய முயற்சியும் பொதுவாக உங்களுக்கு வெற்றியையே கொடுக்கும். ஒரு சிலருக்கு மட்டும் வயிறு சம்பந்தமான உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகங்களிலிருப்பவர்களுக்கு மட்டும் அவர்கள் விரும்பிய பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் சற்று தாமதத்திற்கு பிறகு கிட்டும்.

Mesham Rasi

குடும்பம் மற்றும் உறவினர்களிடையே ஒற்றுமை மேலோங்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொடுத்து அவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களது பொருளாதார நிலை நன்கு லாபகரமாக இருக்கும். பிறருக்கு பிணை கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. கட்டிட துறை மற்றும் வாகனங்கள் சம்பந்தமான தொழில் வியாபாரங்களிலிருப்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். உங்களின் பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகளில் சற்று தாமதத்திற்கு பின்பு உங்களுக்கே தீர்ப்பு சாதகமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு நீண்ட தேடல் மற்றும் அலைச்சலுக்கு பின்பு நல்ல வேலை அமையும்.

mesham

உங்கள் உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சிறிய அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் கடின உழைப்புக்கு பொது மக்கள் மற்றும் அவர்களின் கட்சியில் நற்பெயர் பெறுவார்கள். விவசாய தொழிலிருப்பவர்களுக்கு சற்று கூடுதலான செலவுகள் ஏற்பட்டாலும் கூடிய விரைவில் அவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் சற்று குறைவாகவே கிட்டும் என்றாலும் பண தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருக்காது. வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

Advertisement
SHARE