உங்க உதடு பிங்கி லிப்ஸாக இருக்க 2 ரூபாய் காபி தூள் இருந்தால் போதுமே! உதடு வறண்டு போகாமல் இயற்கையாகவே சிவப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

pinky-lips-bru
- Advertisement -

நம்முடைய முகத்திற்கு அழகு தரும் இரண்டு விஷயம் ஒன்று கண்கள் மற்றொன்று உதடுகள் ஆகும். உதடுகள் எல்லோருக்கும் சிவப்பாக இருப்பது கிடையாது. சிலருக்கு கருப்பாகவும், சிலருக்கு வறண்டு போய் இருக்கக்கூடும். இப்படியான உதடுகளை கூட ரொம்ப சுலபமாக செக்க செவேல் என சிவப்பாக மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? நேச்சுரல் பிங்கி லிப்ஸ் கிடைக்க சூப்பரான டிப்ஸ் இதோ உங்களுக்காக இந்த அழகு குறிப்பு பதிவில்!

நம்முடைய உதடுகள் மென்மையானது. நம் உடம்பில் வியர்க்காத ஒரு பகுதி இந்த உதடுகள் தான். சரியாக தண்ணீர் அருந்தா விட்டால் உதடுகள் வறண்டு போக வாய்ப்புகள் உண்டு. உதடுகள் வறண்டு போனால் உடல்நல கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர முடியும். எனவே ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குறைவில்லாமல் குடிக்க வேண்டும்.

- Advertisement -

உதடுகள் வறண்டு போனால் வெடிக்க ஆரம்பித்து விடும் இது வலியை உண்டாக்கக் கூடியதாகவும் இருக்கும். மேலும் சிலருக்கு முகம் வெள்ளையாக இருந்தாலும் உதடுகள் மட்டும் கருப்பாக இருக்கும். பொதுவாக புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுபோல கருப்பான உதடுகள் இருக்கக்கூடும். அப்படி அல்லாமல் நேச்சுரல் ஆகவே உங்களுக்கு கருப்பான உதடுகள் இருந்தால் நீங்கள் இப்படி செய்யும் பொழுது பின்கி லிப்ஸ் நிச்சயமாக கிடைக்கும்.

பிங்கி லிப்ஸ் கிடைப்பதற்கு முதலில் ரெண்டு ரூபாய்க்கு ஏதாவது ஒரு காபி தூள் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை ஒரு சிறிய பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நைசாக அரைத்த சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்க்க வேண்டும். பின்னர் அரை மூடி எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து கொள்ளுங்கள். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. பின்னர் நன்கு கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் இரவு தூங்கும் முன்பு இந்த கலவையை டூத் பிரஷ் அல்லது விரல்களால் மென்மையாக தேய்த்துக் கொடுக்க வேண்டும். மேல் உதட்டில் ஐந்து நிமிடமும், கீழ்பகுதியில் ஐந்து நிமிடமும் மென்மையாக அழுத்தம் கொடுக்காமல் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உதடுகளில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும். இதனால் புதிய செல்கள் உருவாக வாய்ப்புகள் கிடைக்கும்.

தொடர்ந்து செய்து வரும் பொழுது வறண்ட தன்மையிலிருந்து உங்களுடைய உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து கொள்ளுங்கள். இதை ஃப்ரஷ் ஆகத்தான் செய்ய வேண்டும், ஸ்டோர் செய்யக்கூடாது. அப்போது தான் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஒரே இரவில் உங்க முகம் பளிச்சுன்னு மாற இந்த பேக் ட்ரை பண்ணுங்க. அட்டை கருப்பாக இருக்கவங்க கூட அழகு தேவதையா மாறிடுவாங்கன்னா பாருங்களேன்.

ஒரு மாதம் இப்படி செய்து வர உங்களுடைய உதடுகளில் இருக்கக் கூடிய கருமை தன்மை நீங்கி இயற்கையாகவே செம சிவப்பாக பிங்க் கலரில் மாற ஆரம்பிக்கும். இதில் எந்த விதமான செயற்கைப் பொருட்களும் சேர்க்கப்படவில்லை எனவே எரிச்சல், சிவத்தல் போன்ற எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது நேச்சுரல் ஆகவே உங்க உதடுகள் பார்க்க இனி ரொம்பவே அழகாக மாறும். இதனால் உங்களுடைய முகமும் மேலும் மெருகேறும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -