தொட்டால் வழுக்கிக் கொண்டு செல்லும் அளவிற்கு உங்கள் முகம் ஜொலிக்க செய்ய தக்காளியை இப்படிக்கூட பயன்படுத்துங்கள்!

tomato-lemon-dry-skin
- Advertisement -

கரடு முரடாக இருக்கும் உங்கள் சருமம் தொட்டால் வழுக்கிக் கொண்டு செல்லும் அளவிற்கு மிருதுவாக மாறுவதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. எல்லோருடைய வீட்டிலும் எளிதாக கிடைக்கும் தக்காளியை வைத்து நம் முகத்தை பட்டு போல பளிச்சென ஜொலிக்க செய்ய முடியும். இதற்கு வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் மட்டுமே போதுமானது! அதை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சிட்ரஸ் நிறைந்துள்ள எலுமிச்சை மற்றும் தக்காளி பழங்கள் முக அழகிற்கு பெருமளவு பங்கு வகிக்கிறது. அனைவரையும் வசீகரிக்கும் பேரழகு கொண்ட முகம் என்றால் அது கரடுமுரடாக இல்லாமல், மிருதுவான முகம் உடையவர்களை தான் கூறுவார்கள். இத்தகைய தேகம் எல்லோருக்கும் இருப்பதில்லை. நாம் கொஞ்சம் மெனக்கெட்டு இந்த ஒரு விஷயத்தை கடைபிடித்து வந்தால் நம் முகம் கரடு முரடாக இல்லாமல் எப்போதும் ஆரோக்கியமாக பளிச்சென இருக்கும்.

- Advertisement -

முதலில் இதற்காக நன்கு பழுத்த மற்றும் அழுகாத நல்ல தக்காளி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது எலுமிச்சையுடன் வேறு ஒரு பொருளையும் சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும், வெறும் எலுமிச்சையை பயன்படுத்துவதால் முகத்தில் ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

தக்காளியை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தக்காளி பேஸ்ட் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நன்கு கலந்து கொண்டு முகம் முழுவதும் தடவிக் காய விட்டுக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் 30 நிமிடம் நன்கு உலர விட வேண்டும். இது எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் முகத்தில் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சோர்வு நீங்கி முகம் புத்துணர்வு பெறும். நன்கு உலர்ந்த பின்பு முகத்தை தண்ணீரால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவ்வாறு வாரம் இருமுறை தொடர்ந்து செய்து வர முகத்திற்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து, மேலும் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் வழிதல் நின்று முகம் பிரகாசமாக பொலிவடைய செய்யும். மேலும் முகத்தில் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தும் முன்பு உங்கள் முகத்தை ஒருமுறை தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு துடைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முகத்தில் இந்த இரண்டு பொருளை சேர்த்து ஸ்கிரப்பர் போல மசாஜ் செய்ய வேண்டும். அதற்காக ஒரு பௌலை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் முன்னும் பின்னுமாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த சொரசொரப்பு தன்மை காரணமாக முகத்தில் இருக்கும் அழுக்குகள், தூசிகள் போன்றவை நீங்கிவிடும். அதன் பின்னர் இந்த குறிப்பை பயன்படுத்தும் பொழுது, இன்னும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். நீங்களும் இந்த முறையை முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -