தக்காளிப்பழம் 1 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்க இப்படி ஒரு சூப்பர் ஐடியா இருக்கே. இது உங்களுக்கு தெரியாதா?

tometo1
- Advertisement -

தக்காளி பழம் விற்கும் விலைக்கு அதை நிறைய காசு கொடுத்து வாங்குகின்றோம். ஆனால் பிரிட்ஜில் வைத்து, தக்காளி பழம் விலை அதிகம் என்று சொல்லி சொல்லி, அதை பயன்படுத்தாமலே வீணாக வைத்து சில பேர் குப்பையில் தான் தூக்கிப் போடுகிறார்கள். நிறைய காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டாலும் பரவாயில்லை. எதற்கு அதைப் பயன்படுத்தாமல் வீணடிப்பது. சரி, இந்த தக்காளி பழத்தை விலை அதிகமாக வாங்கும் போது, அது அழுகிப் போகாமல் இருக்க, அந்த தக்காளி பழங்களை ஒரு மாதம் ஆனாலும் வைத்து பயன்படுத்த ஒரு சூப்பர் ஐடியா உங்களுக்காக.

tometo

1/2 கிலோ தக்காளி முதல் 2 கிலோ தக்காளி வரை உங்கள் வீட்டில் எவ்வளவு தக்காளிப்பழம் இருக்கிறதோ அதை அழுகாமல் பாதுகாக்க இப்படி செய்யலாம். பின் சொல்லக்கூடிய அளவுகள் 1 கிலோ தக்காளிக்கு சரியானதாக இருக்கும்.

- Advertisement -

முதலில் வாங்கிய தக்காளியை மேலே இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் புளி கரைசலை ஊற்றி கொள்ள வேண்டும். இப்போது இந்த தண்ணீரில் வாங்கிய தக்காளி பழங்களை போட்டு 10 நிமிடம் ஊறவைத்து நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளியின் மேலே இருக்கும் கெமிக்கல் அனைத்தும் நீங்கிவிடும்.

thakkali-thokku1

அடுத்தபடியாக தக்காளியின் காம்பை வெட்டி தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டி, எல்லா தக்காளிப் பழங்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயில் மிக்ஸி ஜாரில் வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் உப்பு போட்டு, நன்றாக கலந்து விட்டு இந்த கடையின் மேலே ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் இந்த தக்காளியை அப்படியே கொதிக்க விடவேண்டும். இடையிடையே மூடியை திறந்து ஒரு முறை கலந்து விட்டுக் கொள்ளுங்கள். 15 நிமிடத்தில் தண்ணீர் அனைத்தும் சுண்டி தக்காளி தொக்கு பதத்திற்கு வந்துவிடும். அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த விழுதை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

tometo2

ஆறின தக்காளி விழுதை அப்படியே கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரீஸரில் வைக்காமல், பிரிட்ஜில் வைத்தால் 15 நாட்கள் கெட்டுப் போகாது. (கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரீசரில் வைப்பதை தவிர்த்து கொள்ளவும். கண்ணாடி பாட்டில் உடைவதற்கு வாய்ப்பு உள்ளது.) தேவைப்படும் போது இந்த தக்காளி விழுதை ஒரு ஸ்பூனை கொண்டு எடுத்து சாம்பார் ரசம் வைக்க பொரியல் செய்ய நம் விருப்பம் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

tometo3

அப்படி கண்ணாடி பாட்டிலில் இதை போடாமல் ஆறிய இந்த விருதுகளை ஐஸ் ட்ரேயில் ஊற்றி அப்படியே ஃப்ரீஸரில் வைத்து, ஐஸ் கட்டிகளாக மாற்றி விடுங்கள். தக்காளி தொக்கு, ஐஸ்கட்டி ஆக மாறிய பின்பு, இந்த தக்காளி ஐஸ் கட்டிகளை ட்ரைவிலிருந்து தனியாக எடுத்து விட்டு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி, மீண்டும் இந்த பிளாஸ்டிக் டப்பாவை அப்படியே ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும்.

thakkali

தேவைப்படும் போது உங்களுக்கு எத்தனை தக்காளி ஐஸ் கியூப் வேண்டுமோ அதை ஃப்ரீசரில் இருந்து எடுத்து குழம்புக்கு பொரியலுக்கு ரசத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். இந்த தக்காளி பழ ஐஸ் கட்டிகளை ஒரு மாதம் வரை வைத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். கெட்டுப்போவதற்கு வாய்ப்பே கிடையாது. 3 தக்காளிப் பழ ஐஸ் கியூபை எடுத்து போட்டால், 1 தக்காளிக்கு சமமாகி விடும்.

tometo4

தக்காளி பழத்தை மிக்ஸியில் அரைக்கப் போறீங்க. அரைத்த தக்காளி பழங்களை தொக்கு போல மாற்ற போகிறீர்கள். தக்காளி தொக்கை ட்ரேவில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றவேண்டும். ஐஸ் கட்டிகளாக மாறிய தக்காளியை, ட்ரேவிலிருந்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி, மீண்டும் அந்த பிளாஸ்டிக் டப்பாவை ஃப்ரீசரில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது தக்காளிப் பழங்களை எடுத்து பயன்படுத்திக் கொள்ளப் போகின்றோம். அவ்வளவு தாங்க. இந்த டிப்ஸ் பெரும்பாலும் நிறையபேருக்கு பிடித்திருக்கலாம். நிச்சயமா மிஸ் பண்ணாம உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -