- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த தக்காளி சேர்த்த மல்லி சட்னி அரைப்பதற்கு 10 நிமிடம் கூட ஆகாது, இப்படி செஞ்சு...

இந்த தக்காளி சேர்த்த மல்லி சட்னி அரைப்பதற்கு 10 நிமிடம் கூட ஆகாது, இப்படி செஞ்சு கொடுத்தா எவ்வளவு இட்லி கொடுத்தாலும் பத்தவே பத்தாது சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்!

- Advertisement -

புதினா, மல்லி போன்ற இலைகளை வைத்து அரைக்கப்படும் சட்னி ரொம்பவே ருசியானதாக இருக்கும். அந்த வகையில் தக்காளியை சேர்த்து அரைக்கும் இந்த மல்லி சட்னி சுவையில் எல்லோரையும் கவர்ந்து இழுத்து விடும். செய்யும் பொழுதே வீடு முழுக்க வாசனை அப்படி இருக்கும். ரொம்பவே சுலபமாக 10 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ருசி மிகுந்த தக்காளி மல்லி சட்னி ரெசிபி எப்படி எளிதாக செய்வது? என்பதை தொடர்ந்து இந்த பதிவைப் படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ரெண்டு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 6, தக்காளி பழம் – ஐந்து, கொத்தமல்லி இலைகள் – ரெண்டு கைப்பிடி, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சீரகம் – கால் டீஸ்பூன், பூண்டு – ஐந்து பல், புளி – சிறு நெல்லிக்காய் அளவு. தாளிக்க: கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.

- Advertisement -

மல்லி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் மல்லி சட்னி செய்வதற்கு அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக சிவக்க லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து வறுத்து எடுத்த பின்பு அதே எண்ணெயில் நீங்கள் உங்கள் காரத்திற்கு தகுந்தார் போல பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து லேசாக வதக்கி எடுக்க வேண்டும். அதே பேனில் மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் நீங்கள் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பழுத்த தக்காளி பழ துண்டுகளை சேர்த்து மசிய வதக்கி விட வேண்டும். தக்காளி பாதி அளவுக்கு வதங்கி வரும் பொழுது நீங்கள் நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள மல்லித்தழை ரெண்டு கைப்பிடி அளவிற்கு கொத்தாக எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். மல்லி தழை சேர்த்ததும் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.

- Advertisement -

மூடி போட்டு வேக வைத்தால் இரண்டு நிமிடத்தில் நன்கு சுலபமாக மசிந்து விடும். மசிந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முதலில் வறுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சீரகம் மற்றும் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியையும் விதைகள் எல்லாம் எடுத்து விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் கோதுமை மாவு இருக்கா? அப்ப யோசிக்காமல் இந்த ஸ்வீட் அப்பத்தை செஞ்சிடுங்க. வெறும் 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் தயார்.

பின்னர் மிக்ஸியை இயக்கி கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஒருமுறை நன்கு அரைத்து எடுத்த பின்பு, நீங்கள் ஆற வைத்துள்ள தக்காளி மல்லி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது மீண்டும் மிக்ஸியை இயக்கி கொரகொரவென்று ரொம்பவும் நைசாக இல்லாமல், அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தாளிக்க ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தாளித்து சேர்க்க வேண்டும். அவ்வளவுதாங்க, ரொம்பவே ருசியாக இருக்கக்கூடிய இந்த தக்காளி மல்லி சட்னி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

சற்று முன்