வீட்டில் கோதுமை மாவு இருக்கா? அப்ப யோசிக்காமல் இந்த ஸ்வீட் அப்பத்தை செஞ்சிடுங்க. வெறும் 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் தயார்.

wheat-appam_images
- Advertisement -

இந்த மழை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிலேயே இருக்கக் கூடிய சூழ்நிலை. சுடச்சுட மழைக்காலத்துக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார்கள். சமயத்தில் வீட்டில் எதுவும் இருக்காது. கோதுமை மாவு இருந்தால் இந்த ஸ்வீட் அப்பத்தை முயற்சி செய்து பாருங்கள். பஞ்சு போல சாப்டாக அவ்ளோ அருமையாக கிடைக்கும். அதே சமயம் இது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்நாக்ஸ் கூட. ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம்.

இந்த ஸ்நாக்ஸ் செய்ய முதலில் அப்ப மாவு தயார் செய்துவிடலாம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு, ஏலக்காய் – 2, வெல்லம் – 1/2 கப், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், நன்றாக பழுத்த வாழைப்பழம் – 1 வெட்டிப்போட்டு முதலில் இந்த எல்லா பொருட்களையும் அரைத்துக் கொள்ளுங்கள். (பூவம் பழம், செவ்வாழை என்று எந்த பழுத்த பழத்தை வேண்டும் என்றாலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

- Advertisement -

அதன் பின்பு இதில் கோதுமை மாவு  – 1 கப், நன்றாக காய்ச்சி ஆற வைத்த பால் – 1/2 கப், சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். நமக்கு தேவையான சூப்பரான அப்பம் மாவு தயாராகிவிட்டது. இது ரொம்பவும் திக்காக இருந்தால் இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 1 கப் அளவு கோதுமை மாவுக்கு, 1/2 கப் வெல்லம் சரியாக இருக்கும். கூடுதல் சுவை வேண்டும் என்றால் 3/4 கப் வெல்லம் கூட சேர்த்துக் கொள்ளுங்கள் தவறு கிடையாது.

அரைத்த இந்த மாவை மிக்ஸி ஜாரில் இருந்து தனியாக ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு இட்லி மாவை விட கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும். தோசை மாவு பதத்திற்கு தண்ணீராக கரைக்கக் கூடாது. முடிந்தால் கரைத்து வைத்த இந்த மாவை 1/2 மணி நேரம் அப்படியே ஊற வைக்கலாம். இல்லையென்றால் ஒரு சிட்டிகை இதில் ஆப்ப சோடா மாவு சேர்த்து அடித்துக் கலந்து பணியார கல்லில் அப்பம் வார்க்க வேண்டியதுதான்.

- Advertisement -

பணியார கல்லை அடுப்பில் வைத்து எல்லா குழியிலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டுக் கொள்ளுங்கள். சூடான பின்பு நெய்யில் இந்த பணியாரம் மாவை ஊற்றி ஒரு மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். ஒரு பக்கம் வெந்தவுடன் இன்னொரு பக்கமும் திருப்பிப் போட்டு சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான இந்த பணியாரம் தயார்.

உங்க வீட்ல பணியார கல் இல்லை என்றால் கவலைப்படாதீங்க. அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து இதை சின்ன சின்ன தோசையாக வார்த்து நெய் ஊற்றி சிவக்க விட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபி மிஸ் பண்ணாதீங்க. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -