5 நிமிஷம் கூட ஆகாது இப்படி தக்காளி புதினா சட்னி செஞ்சி பாருங்க, இனி உங்க வீட்ல இந்த சட்னி தான் அடிக்கடி செய்வீங்க!

mint-tomato-chutney
- Advertisement -

ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த வெங்காயம் தக்காளி புதினா சட்னிக்கு இட்லி, தோசை, அடை என்று எதை வைத்து கொடுத்தாலும் அவ்வளவு அருமையாக இருக்கும். காலையில் எழுந்து சுடச்சுட இட்லி, தோசையுடன் இந்த சட்னி வைத்து குடுத்துப் பாருங்கள், கூடுதலாக இரண்டு இட்லி சாப்பிடுவாங்க! இனி அடிக்கடி உங்க வீட்டில் இந்த சட்னி தான் கேட்பாங்க, அத்தகைய சுவை மிகுந்த தக்காளி புதினா சட்னி எப்படி எளிமையாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 3, பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, புதினா – 1 கைப்பிடி, பூண்டு பல் – 3, உப்பு – தேவையான அளவு, துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன், தாளிக்க: கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – அறை ஸ்பூன், கறிவேப்பிலை – 1 இணுக்கு, பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன்.

- Advertisement -

தக்காளி புதினா சட்னி செய்முறை விளக்கம்:
தக்காளி புதினா சட்னி செய்ய முதலில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் புதினா இலைகளை காம்பு இல்லாமல் இலைகளை மட்டும் தனியாக கிள்ளி எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பு பொன்னிறமாக வறுபட்டதும், 3 வர மிளகாயை காம்பு எடுக்காமல் அப்படியே சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரை கழுவி அதில் இவற்றை சேர்த்து அப்படியே ஆற விட்டு விடுங்கள். அதே எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காய துண்டுகளை சேர்த்து லேசாக வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். பின்னர் 2 பச்சை மிளகாய்களை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவற்றுடன் மூன்று பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளுங்கள். கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு சுருள வதக்கி விடுங்கள். அனைத்துப் பொருட்களும் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில் கடலைப் பருப்பு, வரமிளகாய் உடன் தேவையான அளவிற்கு உப்பு, துருவி வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் நீங்கள் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ரொம்பவும் நைசாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். தாளிப்பு கரண்டியை அடுப்பி‌ல் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வரிசையாக போட்டு தாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் போதும், எவ்வளவு இட்லி, தோசை கொடுத்தாலும் பத்தவே பத்தாது அவ்வளவு ருசியாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -