சூப்பரான ‘டொமேட்டோ ரவா’ தோசையை வெறும் 10 நிமிடத்தில் செய்துவிடலாம். மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்க! சுலபமான சுவையான ரெசிபிகளில் இதுவும் ஒன்று.

tometo-rava-dosa

எப்பப் பாத்தாலும் இட்லி தோசை பூரி பொங்கல், இதையெல்லாம் கொஞ்சம் ஓரம் வைத்து விடலாம். சூப்பரான ‘தக்காளி ரவா’ தோசையை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து, சுலபமாக இந்த தோசையை செய்து விடலாம். காலையிலும் இதை பிரேக்ஃபாஸ்டாக ரெடி பண்ணலாம். இரவிலும் டின்னருக்கும் சாப்பிடலாம். உங்கள் இஷ்டம் தான். சுலபமான, இந்த சுவையான தோசை எப்படி செய்யறது பார்க்கலாம் வாங்க.

tomato-chutney1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பழுத்த தக்காளி – 3 வெட்டி போட்டுக்கொள்ளுங்கள். வர மிளகாய் 3, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்தபடியாக ஒரு அகலமான பவுலில், நீங்கள் அரைத்த இந்த தக்காளி விழுதை மாற்றிக் கொள்ளுங்கள். இதோடு ரவை – 1/2 கப், அரிசி மாவு – 1/2 கப், கோதுமை மாவு – 1/4 கப், தண்ணீர் 2 கப் சேர்த்து கட்டி விழாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். ரவையை எந்த கப்பல் அளந்து எடுத்து கொள்கிறீர்களோ, எல்லாவற்றையும் அதே கப்பலில் தான் அளக்க வேண்டும். தண்ணீரையும் அதே கப்பில் தான் ஊற்ற வேண்டும்.

அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, சீரகம் – 1 ஸ்பூன், மிளகுத் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு இந்த பொருட்களையும் சேர்த்து நன்றாக கரைத்து ஒரு மூடி போட்டு 15 லிருந்து 20 நிமிடங்கள் ஊற வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

ஊறிய பின்பு மாவு கொஞ்சம் கட்டி பதத்திற்கு வந்திருக்கும். மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை ரவா தோசையை ஊற்றுவது போல தவாவில் தெளித்து ஊற்றவேண்டும். ஓட்டை ஓட்டைகளோடு தோசை வரும். அந்த ஓட்டைகளை மூடக்கூடாது.

மொறுமொறுவென ரவா தோசையை, இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுத்தால், சூப்பரான தோசை தயாராக இருக்கும். தக்காளி சட்னி தேங்காய் சட்னி, உங்களுக்கு பிடித்த சைடிஷ் வைத்து பரிமாறிக்கொள்ளலாம். கொத்தமல்லி சட்னி புதினா சட்னி எல்லாம் கூட சூப்பராக தான் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
இந்தப் பொங்கலுக்கு உங்க வீட்ட, இந்த 2 பொருளை வைத்து சுத்தம் செஞ்சு பாருங்க! கஷ்டமே இல்லாம உங்க வீடு பளபளப்பா மாறிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.