தக்காளி, தயிர் இருந்தால் போதும் இந்த சுவையான சைட்டிஷ்ஷை இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சட்டென செய்து முடிக்கலாம்

tomato
- Advertisement -

தினமும் ஒரே மாதிரியான உணவுகளை சமைப்பது விடுத்து சற்று விதவிதமான உணவுகளை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களும் உற்சாகமாக சாப்பிட்டு முடிப்பார்கள். சாப்பிட வரும் பொழுதே அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி இன்று என்ன சமையல்? தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன செய்திருக்கிறீர்கள்? இவ்வாறானவை தான். அவர்கள் கேட்கும் பொழுதே ஏதாவது வித்தியாசமான உணவு இருந்தால் சூப்பராக இருக்கும் என்ற எண்ணம் அவர்களிடம் தெரியும். எனவே தக்காளி மற்றும் தயிர் சேர்த்து செய்யும் இந்த டிஷ்ஷை ஒருமுறை செய்து அதனை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள கொடுத்துப் பாருங்கள். எந்த அளவிற்கு விருப்பமாக சாப்பிடுகிறார்கள் என்பதை நீங்களே கவனிக்க முடியும். இதன் சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

siru-paruppu-sambar

தேவையான பொருட்கள்:
தக்காளி – அரை கிலோ, தயிர் – அரை கப், பச்சை மிளகாய் – 8, எண்ணெய் – 4 ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, கடுகு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பூண்டுப் – 7 பல், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் காய்ந்ததும் 7 பல் பூண்டை சேர்த்து லேசாக வதக்கிக் வேறு தட்டிற்கு மாற்றி கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பச்சைமிளகாய் மற்றும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தக்காளி

இவை எண்ணெயில் நன்றாக வதங்கியதும் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து ஒருமுறை வதக்கி விட்டு, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவேண்டும். இதனுடன் வதக்கிய பூண்டு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கொத்து கொத்தமல்லி சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அரை கப் தயிரைக் கட்டியில்லாமல் கலந்து கொண்டு, அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து மீண்டும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

tomato

பிறகு இந்த தாளிப்பை செய்து வைத்துள்ள தக்காளி கலவையில் சேர்த்து, நன்றாக கலந்து விட்டு, இதனுடன் ஒரு ஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலந்துவிட வேண்டும். பிறகு இதனை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள பரிமாறிக் கொடுங்கள். இதன் சுவைக்கு 10 இட்லி, தோசை கொடுத்தாலும் பத்தாது என்று விருப்பமாக சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -