எவ்வளவுதான் கோபம் வந்தாலும் பொறுமையை இழக்காத ராசிகள் 5! இவர்கள் கோழைகளா? புத்திசாலிகளா?

anger-astro0
- Advertisement -

எவ்வளவுதான் கோபம் வந்தாலும், தன் பொறுமையை இழக்காமல் இருப்பது என்பது சிறிது கஷ்டமான ஒரு காரியம் தான். வீண் வம்புக்கு செல்பவர்கள் ஒரு ரகம் என்றால், வந்த சண்டையை ஒருகை பார்ப்பது என்பதும் ஒரு ரகம் தான். இப்படி கோபத்திற்கு பல முகசாயம் இருக்கும் பொழுது கோபத்தை அடக்கி ஆளும் திறமை இருக்கும் இந்த 5 ராசிகள் யாரெல்லாம்? இவர்களின் இந்த பொறுமை கோழைத்தனமா? அல்லது புத்திசாலித்தனமா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

மேஷம்:
12 ராசிகளில் முதல் ராசியாகிய இருக்கும் மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த பொறுமைசாலியாக இருக்கின்றனர். இவர்களுக்கு எவ்வளவு தான் கோபம் வந்தாலும் இடம், பொருள், ஏவல் பார்த்து தான் அதனை வெளிப்படுத்துவது வழக்கம். எதிராளிகள் தன்னை கோபமூட்டும் பொழுது, எந்த நோக்கத்திற்காக தன்னை கோபமூட்டுகிறார்? என்பதை தன் அறிவால் உணர்ந்து, அதற்கு ஏற்ப அவர்களின் சூழ்ச்சியை வீழ்த்தி காட்டும் வல்லமை கொண்டவர்கள். இவர்களின் இந்த பொறுமை கோழைத்தனம் அல்ல, புத்திசாலித்தனம் ஆகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு கோபம் என்பது அடிக்கடி வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் உப்பு, சப்பில்லாத விஷயத்திற்கு இவர்கள் படும் கோபம் பயனற்றது. தனக்கு உரிமை உள்ளவர்களிடம் மட்டும் அடிக்கடி இவர்கள் கோபத்தை வெளிப்படுத்தி விடுவது உண்டு. அவ்வபோது கோபத்தை வெளிப்படுத்தி விடுவதால், பெரிதாக இவர்களிடம் உள்ளடக்கி வைத்திருக்கும் கோபம் என்பது இராது! வெளி நபர்களிடம் அவ்வளவு எளிதாக தேவையில்லாமல் இவர்கள் கோபப்படுவது இல்லை. இவர்கள் அடக்கி வாசிப்பதால் அதனை கோழைத்தனம் என்று கூறி விட முடியாது. இவர்கள் கோபப்பட்டால் எதிரில் இருப்பவர்களால் தாக்கு பிடிக்க முடியாமல் போய்விடும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு அடிக்கடி கோபம் என்பதே வராது! எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் இவர்களுக்கு மற்றவர்களை புரிந்து கொள்ளும் தன்மையும் அதிகம். இதனால் தேவையற்ற விஷயத்திற்காக இவர்கள் சட்டென கோபப்படுவது இல்லை. எதிராளி எதற்காக கோபப்படுகிறார்? என்பதை சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர். அவர்களுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் அதிபுத்திசாலி இவர்கள் என்பதால் இவர்களுடைய பொறுமை கோழைத்தனம் அல்ல விவேகம்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு கோபத்தை அடக்கி ஆளும் அதீத சக்தி உண்டு. இவர்கள் தெய்வ கடாட்சத்தை கொண்டு இருப்பதால் இவர்களால் எவ்வளவு பெரிய கோபத்தையும் மனதிற்குள் அடக்கிக் கொள்ள முடியும். ஆனால் இப்படி அடக்கிக் கொண்டிருக்கும் கோபம் ஒரு நாள் வெளியில் வரும் பொழுது அதை இந்த உலகம் தாங்குவதில்லை. சிறுக சிறுக சேமித்த கோபம் ஒரு நாள் விஸ்வரூபம் எடுத்து எதிராளியை போட்டு துவம்சம் செய்துவிடும். இவர்களுடைய பொறுமை ரொம்பவே ஆபத்தானது! ஆனால் அது கோழைத்தனம் அல்ல, தியாகம் என்று கூறலாம். மற்றவர்கள் நலனை கருத்தில் கொண்டு இவர்கள் அமைதியாக செல்வதால் கோழையாக எண்ணி விடாதீர்கள்!

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் மற்றவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாக இருக்கும். இதனால் இவர்கள் சட்டென உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் அல்ல! கோபப்பட வேண்டிய இடத்தில் கூட பொறுமையாக முதலில் எடுத்துக்கூறி, வேலைக்கு ஆகாத பட்சத்தில் பின்னர் சற்று குரலை உயர்த்தி அதை புரிய வைப்பார்கள். மற்றபடி இவர்களுடைய கோபம் எவரையும் புண்படுத்துவது இல்லை. மற்ற ராசிக்காரர்களை விட இந்த 5 ராசிக்காரர்களுக்கு கோபம் என்பது குறைவாக தான் வரும் என்பது சரியா? தவறா? என்று நீங்களே சொல்லுங்க!

- Advertisement -