பூட்டிய சிறையிலிருந்து மாயமாய் மறைந்த சித்தரை பற்றி தெரியுமா

Siddhar-1
- Advertisement -

இறைவனின் சட்டத்தின் படியே வாழ்பவர்கள் தான் சித்தர்களும், ஞானிகளும் மனிதர்கள் மனிதர்களை நெறிப்படுத்தும் சட்ட திட்டங்கள் அவர்களை ஒன்றும் செய்வது இல்லை. அப்படி மனித சட்டத்தை வைத்து ஒரு மகானை அடக்க நினைத்து, அம்மனிதர்கள் அடங்கி போன சம்பவம் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளது. அந்த மகான் த்ரைலிங்க ஸ்வாமிகள். இவர் தனது சித்தாற்றலால் சிலருக்கு பாடம் புகட்டிய நிகழ்வை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

trailanga swamigal Tamil

19 ஆம் நூற்றாண்டில் த்ரைலிங்க ஸ்வாமிகள், கங்கை நதி ஓடும் இந்துக்களின் புனித நகரமான காசி மாநகரில் வாழ்ந்து வந்தார். இவர் முற்றும் துறந்த ஞானியாகையால் இவர் எந்நேரமும் தன் உடலில் ஆடைகளை உடுத்தாமல் இருக்கலானார். பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார். இவரின் ஞான ஆற்றலை அறியாத அக்காலத்தில் இப்பகுதியில் அரசு நிர்வாகம் புரியும் ஆங்கிலேய அதிகாரிகளின் வீட்டு பெண்கள், த்ரைலிங்க ஸ்வாமிகள் நிர்வாணமாக வலம் வருவது தங்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதை ஏற்று த்ரைலிங்க ஸ்வாமிகளை காவலர்கள் கைது செய்ய சென்ற போது அவர்களுடன் தாமாகவே வந்தார். அந்த ஸ்வாமிகளை நீதி மன்றத்தில் கொண்டு நிறுத்தினர். அப்போது அந்த ஆங்கிலேய நீதிபதி கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் மௌனத்தையே பதிலாக தந்தார் த்ரைலிங்கர். எனவே அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக கருதி அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். அக்காலத்தில் சிறு குற்றங்களுக்கு காவல் நிலைய சிறையறையிலேயே கைதிகளை அடைக்கும் வழக்கம் இருந்ததால், அந்த காவல் துறை அதிகாரி த்ரைலிங்க ஸ்வாமிகளை தனது காவல் நிலைய அறையில் பூட்டி, அந்த சாவியை தன்னுடன் வைத்துக்கொண்டார்.

- Advertisement -

சிறுது நேரம் கழித்து சில காவலர்கள் அவரிடம் ஓடிவந்து கங்கை நதிக்கரை ஓரம் தாங்கள் த்ரைலிங்க ஸ்வாமிகளை கண்டதாக கூறினர். இதைக்கேட்டு முதலில் அந்த அதிகாரி சிரித்தாலும், அந்த காவல் நிலைய சிறை அறையை சென்று பார்த்த போது அங்கே த்ரைலிங்க ஸ்வாமிகள் இல்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி அந்த அறையிலிருந்து த்ரைலிங்க ஸ்வாமிகள் தப்பி சென்றதற்கான அறிகுறி ஏதுமில்லாமல் இருப்பதும், அந்த அறை பூட்டிற்கான ஒரே சாவி தன்னிடம் மட்டும் இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்று குழம்பினார். எனவே மீண்டும் த்ரைலிங்க ஸ்வாமிகளை கைது செய்து வேறொரு சிறையறையில் பூட்டினார். சற்று நேரத்திலேயே அந்த அறையிலிருந்து மறைந்து வெளியே தோன்றினார் ஸ்வாமிகள். இப்போது இது நிச்சயம் ஒரு தெய்வீக மனிதரின் செயல் தான் என்றுணர்ந்த அந்த காவல் அதிகாரி, தன் செயலுக்கு ஸ்வாமிகளிடம் மன்னிப்பு கேட்டு, அவரை கைது செய்யும் முயற்சியை கைவிட்டார்.

trailanga swamigal Tamil

ஒரு நாள் த்ரைலிங்க ஸ்வாமிகள் வெளியில் உலாவுவதை கண்ட, அவருக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி, அந்த காவல் அதிகாரியை அழைத்து அது குறித்து விசாரித்தார். அந்த அதிகாரியும் நடந்தவற்றை கூறினார். இதை எல்லாம் கேட்ட நீதிபதி ஸ்வாமிகளை மீண்டும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வருமாறு உத்தரவிட்டார். அவர்களும் த்ரைலிங்க ஸ்வாமிகளை அழைத்து வந்தனர். இப்போது அந்த நீதிபதியே ஸ்வாமிகளை சிறைக்குள் அடைத்து அவரே அந்த அறையின் கதவை சாற்றி பூட்டி, சாவியை தன்னுடன் வைத்துக்கொண்டார். ஆனால் அந்த நீதிபதி காணும் வகையில் அந்த அறையிலிருந்து மறைந்த ஸ்வாமிகள், அந்த கட்டிடத்திற்கு வெளியே தோன்றினார். இதை நேரில் கண்டு அதிர்ந்த நீதிபதி, ஸ்வாமிகளை தவறாக புரிந்து கொண்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டார். இச்சம்பவத்திற்கு பின்பு த்ரைலிங்க ஸ்வாமிகளின் புகழ் எங்கும் பரவியது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
நடராஜர் சிலையின் விஞ்ஞான ரகசியத்தை கண்டு வியந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

English Overview:
Here we have details about Trailanga swami in Tamil. Trailanga swamigal done a miracle in Jail and it was explained here.

- Advertisement -