அன்றாட வாழ்க்கையில் இந்த குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சமையல் மற்றும் வீட்டுக்குறிப்புகள் 10.

kitchen1
- Advertisement -

பெண்கள் சமையல் அறை வேலை வீட்டு வேலை என்று அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வேலைகளை செய்கிறார்கள். செய்யக்கூடிய வேலையைச் சுலபமாக மாற்றிக் கொள்ளவும், ஒரு சில விசயங்களின் மூலம் பணத்தை சேமிக்கவும், சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஸ்மார்ட்டான இல்லத்தரசிகள் இந்த குறிப்பை தெரிந்து வைத்துக் கொண்டால் இன்னும் ஸ்மார்ட்டாக குடும்பத்தை நடத்திச் செல்லலாம்

துணிகளை கடைசியாக அலசும் தண்ணீரில் நான்கைந்து சொட்டு கிளிசரின் ஊற்றி கலந்து, அதன் பின்பு அந்தத் தண்ணீரில் துணியை அலசினால், துணியில் சுருக்கம் இருக்காது. மெடிக்கல் ஷாப்பில் இந்த கிளிசரின் சுலபமாக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

கடையிலிருந்து புதியதாக வாங்கிய லைலாண் கயிறை அப்படியே கொடி கட்டிப் பயன்படுத்தினால் சீக்கிரம் அறுந்து போகும். வாங்கிய புது லைலாண் கையிறை 10 நிமிடம் சோப்புத் தண்ணீரில் ஊறவைத்து அதன் பின்பு நல்ல தண்ணீரில் அலசி அதன் பின்பு இந்தக் கயிறை கொடிகட்டி பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு அறுபடாமல் இருக்கும்.

நிறைய பேர் வீட்டில் புதியதாக சுண்ணாம்பு அடிப்பார்கள். ஆனால் புதியதாக அடித்த சுண்ணாம்பின் வாடை வீட்டிற்குள் அப்படியே நமக்கு இடையூறாக இருக்கும். புதியதாக சுண்ணாம்பு அடைத்த அறைக்குள் ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை கொண்டு போய் வையுங்கள். சிறிது நேரத்தில் அந்த புது சுண்ணாம்பின் வாடை நீங்கி விடும்.

- Advertisement -

கத்தியை சாணம் பிடித்து வைத்தால், அது சீக்கிரத்தில் மொக்கையாக விடும். ஆனால் தினம்தோறும் அந்த கத்தியின் மேலே தேங்காய் எண்ணெயை தடவி பராமரித்து வந்தால் கூர்மை குறையாமல் நீண்ட நாட்களுக்கு சார்பாக இருக்கும்.

கத்தரிக்காய் பொரியல் வதக்கல் கூட்டு எது செய்தாலும் சரி இறுதியாக அதில் கடலை மாவை தூவி, அதன் பின்பு அடுப்பிலிருந்து இறக்கினால் கத்திரிக்காயின் வாசம் கமகமவென இருக்கும்.

- Advertisement -

ஒரே ஒரு நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நெல்லிக்காய் சாறுடன் இரண்டு லிட்டர் தண்ணீர் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் இந்த தண்ணீரை பருகி வர உடல் அசதி இல்லாமல் இருக்கும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் கோல மாவை கொட்டி அதன் மேலே பூண்டை கொட்டி ஸ்டோர் செய்து வைத்தால் பூண்டு 1 வருடம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

முருங்கைக் கீரையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்தால், அது தண்ணீரில் ஒட்டியும் ஒட்டாமலும் நம் கையோடு ஒட்டி இருக்கும். அந்தக் கீரை நன்றாக சுத்தம் ஆகிவிட்டதா என்று கூட நமக்கு தெரியாது. முருங்கைக்கீரை கழுவும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து போட்டு அலசி கழுவி விட்டால் கீரையில் இருக்கும் எல்லா கிருமிகளும் அழிந்துவிடும்.

வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது அதில் 1 ஸ்பூன் தயிரை விட்டு வதக்கினால் அதனுடைய பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும்.

முட்டை வேக வைத்த பாத்திரத்தை எவ்வளவுதான் தேய்த்து கழுவினாலும் அதில் இருக்கும் வாடை போகாது. அந்தப் பாத்திரத்தில் கொஞ்சமாக டீத்தூளை போட்டு நன்றாக தேய்த்து கழுவினால் முட்டை வாடை சீக்கிரம் நீங்கிவிடும். டீ போட்டு வடிகட்டிய, திப்பி டீ தூள் இருந்தால் கூட அதை பாத்திரம் தேய்க்க பயன்படுத்தலாம்.

- Advertisement -