முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்க உப்டான்(ubtan) ஃபேஸ் பேக்கை நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? இதை ஒரு முறை முகத்தில் போட்டால் நீங்கள் அப்படியே அழகு தேவதையாக மாறிவிடுவீர்கள்.

face6
- Advertisement -

இப்போதெல்லாம் ட்ரெண்டிங்காக கடைகளில் விற்கக்கூடிய ஃபேஸ் பேக் தான், உப்டான் ஃபேஸ் பேக். ஆன்லைனில் கூட இதை ஆர்டர் செய்து வாங்கி முகத்துக்கு பேஸ் பேக்காக போடக்கூடிய நிறைய வீடியோக்களை ட்ரெண்டிங்காக நாம் பார்த்திருப்போம். அதிக காசு கொடுத்து வாங்கக்கூடிய இப்படிப்பட்ட ஒரு ஃபேஸ் பேக்கை நம் வீட்டிலேயே தயார் செய்ய முடியும். ஒரு சில பொருட்களை சேர்த்து. அது எப்படி என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

உப்டான் ஃபேஸ் பேக் செய்முறை:
ஒரு சின்ன பவுல் எடுத்துக்கோங்க. அதில் மூன்றிலிருந்து நான்கு டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் ஊற்றிக் கொள்ளவும். இதில் குங்குமப்பூ இரண்டு சிட்டிகை சேர்க்கவும். அடுத்து கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன், சந்தன பொடி 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கட்டிகள் இல்லாமல் கலக்க வேண்டும்.

- Advertisement -

தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பாலை ஊற்றி இதை பேக்காக தயார் செய்து கொள்ளுங்கள். அழகான மஞ்சள் நிறத்தில் உங்களுக்கு ஒரு ஃபேஸ் பேக் கிடைத்திருக்கும். இதுதான் உப்டான் ஃபேஸ் பேக். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். உங்கள் முகம் முழுவதையும் மேக்கப் இல்லாமல் சுத்தமாக கழுவி விட்டு, துடைத்து விடுங்கள். பிறகு இந்த பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்யவும். 25 நிமிடம் முகத்தில் இருக்கட்டும். பேக் நன்றாக டிரையாகி வந்ததும் முகத்தை லேசாக மசாஜ் செய்தபடி கழுவி விடுங்கள். உங்களுக்கு முகத்தில் நிறைய பிம்பிள் இருந்தால் மசாஜ் செய்ய வேண்டாம். அப்படியே முகத்தை கழுவினால் போதும்.

வாரத்தில் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வர முக அழகு மேலும் மேலும் அதிகரிக்கும். முகத்தின் நிறம் வெள்ளையாக மாறும். கரும்புள்ளிகள் முகப்பரு இருந்தால் கூட அது எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கிவிடும்.

- Advertisement -

சில பேருக்கு பால் செட்டாகாது. சரும பிரச்சனைகள் வரும் என்றால் நீங்கள் பாலுக்கு பதில் இதில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் முகத்திற்கு மேலே இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தாலும் அதன் மூலம் உங்களுக்கு 30 லிருந்து 40% மட்டுமே பலன் தெரியும். இந்த ஃபேஸ் பேக் போடுவதோடு சேர்த்து, நீங்கள் உள்ளுக்கு சாப்பிடக்கூடிய பொருட்களின் மூலம் தான் உங்களுடைய சரும ஆரோக்கியமும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் சருமம் கரடு முரடாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இந்த இரண்டு பொருட்களை உபயோகப்படுத்தி உங்கள் சருமத்தை பட்டு போல் மிருதுவாக மாற்ற முடியும்.

ஆகவே ஆரோக்கியமான சத்து தரக்கூடிய பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வர சரும அழகும் கூடும் என்ற இந்த தகவலோடு இந்த அழகு குறிப்பு நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -