மழை பெய்து உடல் உஷ்ணம் அதிகமாகி விட்டதா? அப்போது உடனே இந்த பொரியல் செய்து சாப்பிடுங்கள், உங்கள் ஆரோக்கியப் பிரச்சினை அனைத்தும் சரியாகிவிடும்.

keerai
- Advertisement -

உடல் ஆரோக்கியம் குறைபாடு வந்தவுடன் மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கிறோம். மருத்துவரும் நமக்கு அறிவுரை கூறுகிறார். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வதுதான் அவரது முதல் வார்த்தையாக இருக்கும். ஆனால் எத்தனை பேர் சத்தான உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம் என்று பார்த்தால், நூற்றுக்கு 25 விழுக்காடு கூட இருக்காது. ஆனால் சத்தான காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரை வகைகளை எப்பொழுதும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அவ்வாறு மணத்தக்காளிக்கீரை நமது உடம்பிற்கு மிகுந்த சக்தி அளிக்கக்கூடியதாகும். இதில் பலவித மருத்துவ குணங்கள் இருக்கிறது. வயிற்றுவலி, வயிற்றுப்புண், வாய் புண் மற்றும் உடல் உஷ்ணம் போன்ற அனைத்திற்கும் இது தீர்வாக அமைகிறது. கீரையை தினமும் உணவுடன் கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். வாருங்கள் இதில் ஒன்றான மணத்தக்காளி கீரை பொரியலை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 4 பல், வர மிளகாய் – 4, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் மணத்தக்காளி கீரையின் இலையை மட்டும் தனியாக கில்லி கொண்டு, அவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வைக்க வேண்டும். பிறகு நான்கு பல் பூண்டை சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும்.

பிறகு வரமிளகாயை இரண்டாக கிள்ளி வைக்க வேண்டும். அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பிறகு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு 10 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள மணத்தக்காளிக் கீரையையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் கீரையை ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே வேகவிட வேண்டும்.

கீரை பாதி அளவு வெந்ததும் அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து விடவேண்டும். சிறிது நேரம் கழித்து இறுதியாக துருவி வைத்துள்ள ஒரு ஸ்பூன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் தயாராகிவிட்டது. இதனை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது குழம்பு சாதத்துடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

- Advertisement -