எல்லோருக்கும் தேவைப்படும் படியான 7 சமையல் குறிப்பு

vadai1
- Advertisement -

நிறைய எண்ணெயில் பலகாரங்களை சுட்டு எடுக்கும் போது, அந்த எண்ணெயை பலகாரம் சில சமயம் அதிகமாக உறிஞ்சி விடும். உதாரணத்திற்கு அதிரசம், மெதுவடை, மசால் வடை, பூரி, போண்டா, அப்பம் சுடும் போதெல்லாம் இந்த பிரச்சனையை நாம் எதிர்கொள்வோம். அதை தவிர்க்க கடாயில் இருக்கும் எண்ணெயில் இந்த ஒரு பொருளை போடுங்க போதும்.

பலகாரம் எண்ணெயை அதிகமாக உறிஞ்சாமல் இருக்கும். அது என்ன பொருள் என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்போடு சேர்த்து, இல்லத்தரசிகளுக்கு தேவையான இன்னும் சில பல வீட்டு குறிப்பு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

குறிப்பு 1:
வாழை இலையின் நடுவில் தண்டு பகுதி இருக்கிறது அல்லவா. அதை சின்ன துண்டாக கத்திரிக்கோலால் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யும் போது, இந்த வாழைத்தண்டு துண்டை அந்த காய்ச்சிய எண்ணெயில் போட்டுவிட்டு, பிறகு பலகாரங்களை சுட்டு எடுத்தால், பலகாரத்தில் எண்ணெய் அதிகமாக குடிக்காமல் இருக்கும். பலகாரங்களை சுட்டு எடுக்கும் வரை அந்த சின்ன தண்டு எண்ணெயிலேயே இருக்கட்டும்.

குறிப்பு 2:
இட்லி அரிசி 5 கப், உளுத்தம் பருப்பு 1 கப், வெந்தயம் 1 ஸ்பூன், இந்த அளவில் பொருட்களை ஊற வைத்து மாவு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், மைதா மாவு 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இதை நன்றாக கரைத்து அரைத்து வைத்திருக்கும் புளித்த மாவில் ஊற்றி கலந்து தோசை வார்த்தால் தோசை சிவந்து மொறுமொறுப்பாக ஹோட்டல் தோசை போல கிடைக்கும்.

- Advertisement -

குறிப்பு 3:
பாயாசத்தில் உலர் திராட்சையை நெய்யில் வதக்கி கொட்டுவீர்கள் அல்லவா. அதற்கு பதில் நான்கு ஐந்து பேரிச்சம் பழங்களை சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி, அதை நெய்யில் வதக்கி பாயசத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டு பாருங்கள். டேஸ்ட் அமிர்தம் போல இருக்கும்.

குறிப்பு 4:
பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு வருவல் கருணைக்கிழங்கு வறுவல் இப்படி ஏதாவது வறுவல் செய்யும்போது இறுதியாக இந்த பொட்டுக்கடலை பொடியை அந்த வறுவலில் தூவி இறக்கினால் சுவையை சூப்பராக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 5:
சில சமயம் மசாலாக்களை அரைத்து போட்டு வெங்காய சாம்பார் வைப்பது வழக்கம். வர மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் தேங்காய் இவை எல்லாம் வறுத்து அரைத்து சாம்பாரில் ஊற்றி செய்வார்கள் அல்லவா. இதோடு 2 சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி அரைத்து சாம்பார் வச்சி பாருங்க சுவை சும்மா அல்லும்.

குறிப்பு 6:
இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி அறைக்கணும். இதோடு கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது. அரைத்த இந்த இஞ்சி பூண்டு விழுதை எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றவும். இதில் சூடான 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி கலந்து கொஞ்ச நேரம் ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு இஞ்சி பூண்டு விழுது கெடாமல் பிரெஷ் ஆக அப்படியே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பட்டுப் புடவைகளை வீட்டில் எளிமையாக சுத்தம் செய்வது எப்படி?

குறிப்பு 7:
ஹோட்டலில் கிரேவி, சூப் இவைகளில் எல்லாம் பிரஷ் க்ரீம் சேர்ப்பார்கள். அதற்கு பதில் நீங்கள் சிறிதளவு வெண்ணெயை பாலோடு கலந்து சேர்த்து பாருங்கள். உங்கள் வீட்டில் வைக்கும் சூப் கிரேவி எல்லாம் சூப்பர் சுவையாக கிடைக்கும்.

- Advertisement -