உக்கிர தெய்வம் உங்களுடைய குல தெய்வமா? குலதெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடுவது சரியா? தவறா? என்பதை நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

kula-dheivam-lemon
- Advertisement -

இஷ்ட தெய்வ வழிபாடு மட்டுமே செய்பவர்களும், குலதெய்வ வழிபாடு மட்டுமே செய்பவர்களும் கூட இருக்க தான் செய்கின்றனர். குலத்தைக் காக்கும் குலதெய்வத்தை எல்லா தெய்வங்களை காட்டிலும் பெரிதாக கருதுவதால் இப்படி குலதெய்வ வழிபாடு மட்டுமே செய்தும் வருகின்றனர். நீங்கள் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றால் கூட முதலில் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்கிறீர்களா? என்று தான் கேட்கிறார். நம் பிரச்சனைகளுக்கு முதல் தீர்வாக இருப்பது நம் குலதெய்வம் தான் என்பது நம்முடைய நம்பிக்கை. இப்படி இருக்க உக்கிர தெய்வம் நம்முடைய குல தெய்வமாக இருந்தால் என்ன செய்வது? குலதெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடுவது என்பது சரியா? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Ayyanar3

பொதுவாக உக்ர தெய்வங்களுடைய படங்களை வீட்டில் வைத்து வழிபடுவது கூடாது என்பது தான் நியதி. அதனால் தான் காளியம்மன் படம், கால பைரவர் படத்தை எல்லாம் வீட்டில் வைத்து வழிபட கூடாது என்று கூறியுள்ளனர். அந்த வரிசையில் உக்கிரமான குல தெய்வங்களாக இருக்கும் அய்யனார், முனீஸ்வரர், கருப்பசாமி போன்ற குலதெய்வங்களை நம்முடைய வீட்டில் வைத்து வழிபடலாமா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். கொஞ்ச காலம் முன்பு வரை குலதெய்வ வழிபாடு என்பது பிரசித்தி பெற்று விளங்கியது. இன்று உங்களில் பாதி பேருக்கு உங்களுடைய குலதெய்வம் என்ன? என்பதே தெரியாமல் கூட இருக்கும். அந்த அளவிற்கு குலதெய்வ வழிபாடு குறைந்துவிட்டது.

- Advertisement -

குலதெய்வம் என்பது நம் முன்னோர்களுடைய அம்சமாகவும் இருக்கிறது. பல பேருக்கு தங்களுடைய வீரமிக்க, தியாகமிக்க முன்னோர்கள் தான் குலதெய்வமாக இருப்பார்கள். இப்படி வீரமும், ஆக்ரோஷமும் கொண்ட முன்னோர்களை அல்லது குலதெய்வத்தை அவர்களுடைய கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தாலும், ஒரு சில கோவில்களில் அங்குள்ள மண்ணையும், விபூதியையும் கூட வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இவற்றை வீட்டிற்கு கொண்டு சென்றால் குலதெய்வம் நம்முடனேயே வந்துவிடும் என்பது அவர்களுடைய கருத்து. அய்யனார் கோவில்களில் இருக்கும் ஒவ்வொரு செங்கல் கூட அய்யனாராகவே பாவிக்கப்படுகிறது.

Ayyanar

இத்தகைய உக்கிர குலதெய்வங்களை குறி கேட்கவும், படையல் போடவும் வீட்டிற்கு அழைத்து வழிபடலாம். ஆனால் மற்ற சமயங்களில் வீட்டிற்கு அழைப்பதும், அவர்களுடைய படத்தை வைத்து வழிபடுவது என்பது கூடாது என்கின்றனர் சான்றோர்கள். இவற்றை உங்கள் முன்னோர்கள் அனுமதியின்றி கட்டாயம் செய்யவே கூடாது. பெரியவர்கள் யாராவது இருந்தால் உங்களுடைய குலதெய்வத்தை எப்படி வழிபடுவது? வீட்டிற்கு அழைக்கலாமா? கூடாதா? என்று கேட்டுக் கொண்டு பின்னர் நீங்கள் அவற்றை கடைபிடிக்கலாம். ஆனால் நீங்களாகவே இவ்வாறு செய்வது தவறு என்று தான் கூற முடியும்.

- Advertisement -

அர்த்த ஜாமத்தில் வீட்டிற்கு பின்புறத்தில் முனீஸ்வரருக்கு இஷ்டமான பொருட்களையெல்லாம் வைத்து, ஆடு, கோழி போன்ற உயிர் பலியிட்டு வழிபடுபவர்கள் உண்டு. இது அவர்களுடைய பழக்க வழக்கங்கள் ஆகும். இவர்கள் வருடம் ஒரு முறை தான் இவ்வாறு செய்வார்கள். மற்ற சமயங்களில் குலதெய்வ கோவிலுக்கு சென்று தான் வழிபடுவார்கள். வீட்டில் படத்தை வைத்து வழிபட மாட்டார்கள். இது போல அவரவர்களுடைய குலதெய்வ முறைப்படி வழிபட வேண்டுமே தவிர, நீங்களாகவே குலதெய்வ படத்தை வைத்து வழிபடுவது அவ்வளவு நல்லதல்ல.

kuladheivam

குலதெய்வத்தை நினைத்து வணங்க வேண்டியவர்கள் கலசத்தில் மஞ்சள் நீரை வைத்து குல தெய்வ மந்திரங்கள் கூறி, ஆகர்சனம் செய்து நைவேத்தியம் படைத்து சாதாரணமாக மாதமொருமுறை வழிபட்டு வரலாம். பஞ்ச விருட்சங்களாக கூறப்படும் அரசமரம், ஆலமரம், வன்னி மரம் போன்ற மரங்களுக்கு அடியில் கல்லை வைத்து குல தெய்வமாக பாவித்து வழிபடலாம். இப்படி நிறைய வழிகளில் குலதெய்வ வழிபாடு செய்வது உண்டு. இவற்றை முறையாக உங்களுடைய முன்னோர்கள் அல்லது பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -