எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமான வடை மோர் குழம்பை இப்படி வச்சு பாருங்க. இந்தக் குழம்பே பிடிக்காதவங்க கூட தட்டு தட்டா சாப்பாடு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

vadai moor kuzhambhu
- Advertisement -

குழம்பு வகைகளிலே மிகவும் சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்யக்கூடிய ஒரு குழம்பு எனில் அது மோர் குழம்பு தான. இதை செய்வது சுலபம் எனினும் ருசி அட்டகாசமாக இருக்கும். ஆனாலும் பலருக்கு மோர் குழம்பு பிடிக்காது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு மோர் குழம்பை அதுவும் வடை சேர்த்து எப்படி சுவையாக செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை 

இந்த மோர் குழம்பு செய்ய முதலில் ஒரு கப் அளவு கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்து அலசி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்த பின்பு இதில் நான்கு பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் சோம்பு இவை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் மாற்றிய பிறகு இதில் ஒரு இன்ச் அளவுக்கு துருவியை இஞ்சி கைப்பிடி அளவு கறிவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் கால் டீஸ்பூன் பெருங்காயம், அரை டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து எண்ணெயில் போட்டு சின்ன சின்ன வடைகளாக சுட்டு எடுத்து தனியாக வைத்து விடுங்கள்.

இப்போது மோர் குழம்பு தயாரித்து விடுவோம். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் நான்கு பல் பூண்டு, மூன்று பச்சை மிளகாய், அரை ஸ்பூன் சீரகம், நான்கு சின்ன வெங்காயம் என அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்து ஒன்னரை கப் தயிர் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரே ஒரு சுற்று மட்டும் விட்டு எடுத்து விடுங்கள். தயிர் கட்டிகள் இல்லாமல் கிடைத்து விடும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை ஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொரிந்த பிறகு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு கால் டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து அதுவும் நிறம் மாறிய பிறகு இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை இதில் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு ஸ்பூன் கடலை மாவை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்து அதையும் இதில் ஊற்றி ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்பெஷல் காரச்சட்னியை இனி நம்ம வீட்டிலேயே சுலபமா இப்படி செய்யலாங்க. இந்த சட்னி மட்டும் அரைச்சுட்டீங்கன்னா இன்னைக்கு எல்லாம் நீங்க இட்லி ஊத்திக்கிட்டே இருக்க வேண்டியது தான்.

மோர் குழம்பில் பச்சை வாடை அடங்கி இவையெல்லாம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை மீடியம் பிலிம் வைத்து நாம் மிக்ஸியில் அடித்து வைத்து தயிரை இதில் ஊற்றி லேசாக போகும் போது அடுப்பை அணைத்து விடுங்கள். மோர் குழம்பு இப்போது தயாராகி விட்டது. இந்த மோர் குழம்பில் நாம் ஏற்கனவே சுட்டு வைத்து வடைகளை எடுத்து குழம்பில் போட்டு 15 நிமிடம் வரை ஊறவிட்டு அதன் பிறகு சுட சுட சாதத்தில் இந்த வடை மோர் குழம்பு ஊற்றி சாப்பிட்டு பாருங்கள் சுவை அப்படி இருக்கும்.

- Advertisement -