இன்றைய தினம் புரட்டாசி பௌர்ணமி இந்நாளில்திருமணமான பெண்கள் இந்த ஒரு விரதத்தை மேற்கொண்டால் உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

- Advertisement -

பௌர்ணமி என்றாலே தெய்வங்களுக்கு மிகவும் உகந்த நாள். அதிலும் சிவபெருமானுக்கு மிக மிக உகந்த தினம். இவருக்கு பல விரதங்களை நாம் மேற்கொண்டாலும், இந்த புரட்டாசி பௌர்ணமியில் மேற்கொள்ளப்படும் உமா மகேஸ்வர விரதம் மிகவும் முக்கியமானது. இது குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட செய்யப்படும் விரதம். எனவே திருமணம் ஆன பெண்கள் அனைவரும் புரட்டாசி பௌர்ணமியில் இந்த விரதத்தை மேற்கொள்வதால் அவர்கள் குடும்பத்தின் கணவன் மனைவி ஒற்றுமை மேலும் பலப்படும் அத்தகைய இந்த உமா மகேஸ்வர விரதத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கான பதிவு தான் இது.

துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் மகாவிஷ்ணுவும், லட்சுமி தாயாரும் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வந்த போது அவருடன் மீண்டும் தாயார் இணைய சிவனை நோக்கி இந்த உமா மகேஸ்வர விரதம் இருந்து இணைந்ததாக நமது புராணக் கதைகள் கூறுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை நம் வீட்டில் எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

இந்த விரத நாளன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் தூய்மையான மனதோடு உங்கள் பூஜையை துவங்க வேண்டும். அன்றைய தினம் சிவபெருமான் பார்வதி தாயார் இருவரும் இணைந்திருக்கும் படத்தை பூஜை அறையில் வைத்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். கட்டாயமாக இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் படத்தை தான் வைக்க வேண்டும். தனியாக இருக்கும் படத்தை வைத்து செய்யக்கூடாது.

பூஜை அறையில் முதலில் கோலம் போட்டு மனை வைத்து அதன் மேல் சிகப்பு நிற துணியை விரித்து அதில் சிவன் பார்வதி படத்தை வைத்த பிறகு, அதற்கு வில்வ மாலை கட்டாயமாக சூடவேண்டும் வில்வ மாலை கிடைக்கவில்லை என்றால் வில்வ இலைகளையாவது நீங்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் அதிரசம் செய்து வைத்தால் விசேஷம் முடியாதவர்கள் பால், கல்கண்டு போன்று ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்துக் கொள்ளலாம். வெற்றிலை, பாக்கு, பழம், சிகப்பு நிற நோம்பு கயிறு அவசியம், இதை தவிர வேறு பழங்கள் கிடைத்தாலும் வைக்கலாம். இவை எல்லாம் வைத்த பிறகுபூஜை அறையில் சிவன் பார்வதி படத்தின் முன் அமர்ந்து ஓம் நமசிவாய இன்னும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜை பிறகு செய்த நோன்பு கயிறு கணவன் மனைவி இருவரும் கட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் குழந்தைகளும் கட்டிக் கொள்ளலாம். ஆனால் கணவன் மனைவி கட்டாயம் இந்த நோம்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். நோன்பு கயிறு உங்கள் கைகளில் ஏழு நாட்கள் வரை இருக்க வேண்டும். அதன் பிறகு இந்த கயிறை செடிகளில் கட்டி விடலாம்.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது பூஜை முடியும் வரை உணவருந்தாமல் இருந்து விரதம் மேற்கொண்டால் சிறப்பு, முடியாதவர்கள் இதை தவிர்த்து விடலாம். அப்படி உண்ணாமல் விரதம் இருந்துபவர்கள் இந்த பூஜை முடிந்த பிறகு பூஜையில் படைக்கும் நெய்வேத்தியத்தை தான் முதலில் சாப்பிட்ட பிறகு தான் விரதத்தில் முடிக்க வேண்டும். இந்த விரதம் மேற்கொண்ட தினத்தில் சிவன் கோவில்ளுக்கு சென்று இங்கு உள்ள சிவனடியார்களுக்கு உணவு தானம் செய்து பிறகு தானும் சாப்பிட்டால் அது மேலும் விசேஷத்தை தரும்.

இதையும் படிக்கலாமே: லட்சுமியின் அருளையும் மும்மூர்த்திகளின் ஆசியையும் பெற அரச இலை தீபம் பரிகாரம்

இதுதான் இந்த உமா மஹேஸ்வர விரதம் மேற்கொள்ள வேண்டிய எளிய வழிமுறை. இந்த விரதத்தை மேற்கொண்டு குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ எல்லாம் வல்ல சிவனை நாம் வேண்டிக் கொண்டு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -