உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை

Love kavithai

உன் சிகையின் வாசனை
எனக்குள் போதை தரும் தூரத்தில்
நான் எப்போதும் வாழவேண்டும்..
உன் சுவாசத்தின் சூடு
என் இதயத்தை தடவும்
தூரத்தில் நான் எப்போதும் உறங்க வேண்டும்..
மதத்திற்கு அப்பாற்பட்ட நம் காதல்
எனக்குள் இருக்கும் வரை மட்டுமே
என் உயிர் என்னிடம் இருக்க வேண்டும்..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே
சண்டையிடும் உன் நினைவுகள் – காதல் கவிதை

காதலில் வீழ்ந்த ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி தன் காதலனோ காதலியோ எப்போதும் தன் அருகே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் மேலோங்கி நிற்கும். ஒரு பெண்ணின் கூந்தல் இயர்கையாகவோ அல்லது மலர்களாலோ புது நறுமணத்தை தரும். காதலியின் கூந்தலில் இருந்து வரும் அந்த நறுமணத்தில் தவழ்ந்திருக்க பெரும்பாலான ஆண்கள் ஏங்குவது வழக்கம் தான்.

காதலி விடும் மூச்சி காற்றின் சூடு காதலன் மீது எப்போதும் படும்படி வாழும் வாழ்க்கை உண்மையில் சொர்கம் தான். அத்தகைய வாழ்வை வாழும் ஆசை காதலனுக்கு இருப்பது இயல்பு தான். இது போன்ற சின்ன சின்ன ஆசைகள் அனைத்தும் காதலி ஒரு ஆணோடு வாழ்ந்தால் தான் கிடைக்கும். இவைகள் இல்லாத வாழ்வு உண்மையில் நரகம் தான்.

Love Kavithai Image
Love Kavithai

நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகள், தோழன் தோழி கவிதை, பிரிவு சம்மந்தமான கவிதை என பல கவிதைகள் இங்கு உண்டு.