உனக்கான காத்திருப்பு – காதல் கவிதை

Love kavithai

மீனின் வருகைக்காக
பல மணி நேரம் காத்திருக்குமாம் கொக்கு..
அது போல என் காதல் மானின்
வருகைக்காக நானும்
பல மணி நேரம் காத்திருக்கிறேன்..
ஆனால் தினம் தினம்
ஏமாற்றம் தான் மிச்சம்..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
சுமையான நினைவுகள் – காதல் கவிதை

ஒருதலை காதல் கூட ஒரு சுகம் தான். தான் காதலிக்கும் ஆணோ பெண்ணை தினமும் ஒரு வழியை கடந்து செல்வார்கள் என்றால் அந்த வழியில் பல மணி நேரமாக காத்திருப்பார்கள் ஒருதலை காதலர்கள். தான் காதலிப்பவர்களின் முகத்தை கண்ட பிறகே அவர்கள் முகத்தில் புன்னகை பூக்கும். ஆனால் இதில் சோகம் என்னவென்றால் இவர்கள் காதலிப்பது கூட அவர்களுக்கு பல நேரங்களில் தெரியாது.

பொன்னான பல மணி நேரத்தை ஒரு பெண்ணிக்காகவோ ஆணிற்காகவோ எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செலவிடும் இவர்கள் கூட ஒரு வகையில் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தான். இவர்களின் காதல் பல நேரங்களில் ஒருதலை காதலாகவே இருந்து மறைந்து போகும். இனியாவது இவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தி காதலுக்கு பெருமை சேர்க்கட்டும்.

Love Kavithai Image
Love Kavithai

காதல் பாடல் வரிகள், நட்பு பாடல் வரிகள், காதல் கவிதைகள் இப்படி அன்பு சார்ந்த பல தகவல்கள் இங்கு உள்ளன.