உணவின் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாவது எப்படி தெரியுமா

Goddess Lakshmi
- Advertisement -

உயிர்கள் அனைத்தும் வாழ உணவு முக்கியம். இந்த உணவிற்கு பல வித தெய்வீக ஆற்றல் இருப்பதை பலரும் உணருவதில்லை. உணவை பக்குவமாக சமைத்து உண்ணும் பழக்கம் மனிதர்களிடம் மட்டுமே உள்ளது. அந்த உணவு பிற உயிரினங்களுக்கும் கிடைக்கும் வண்ணம் மனிதர்கள் நடந்துகொள்வது அவசியம். நாம் உண்ணும் உணவின் மூலம் நமது வீடுகளில் சுபிட்சமும் லட்சுமி கடாட்சமும் அதிகரித்து வீட்டில் பணம் பெறுக, நிம்மதி அதிகரிக்க நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

food

நமது தேவைக்கேற்ற வகையில் சமைக்கப்படும் உணவை குறிப்பாக காலை வேளைகளில் அந்த உணவில் ஒரு சிறிய அளவு எடுத்து, நீங்கள் வணங்கும் இறைவனின் படத்திற்கு முன்பு நிவேதனமாக வைத்து, அந்த தெய்வத்தை வணங்கி பின்பு அதை உண்பது தெய்வங்களின் அருளாசியை பெற்று தரக்கூடிய செயலாகும். காலை உணவை நாம் உண்பதற்கு முன்பு உணவில் ஒரு பகுதியை பசி என உணவை யாசகம் கேட்டு வருபவர்களுக்கு வழங்குவது, அந்த “சிவ பெருமானுக்கே” உணவை வழங்குவதை போன்றது என சான்றோர்கள் கூறுகின்றனர். அந்த உணவின் மற்றொரு சிறு பகுதியை காக்கைகளுக்கு இரையாக வைக்க “சனீஸ்வர பகவானின்” அருளுக்கு பாத்திரமாகி நோய் நொடியற்ற நீண்ட ஆயுளை, இக்காரியத்தை தினந்தோறும் செய்து வருபவர்கள் பெறுவார்கள்.

- Advertisement -

நமக்கு வைக்கப்பட்ட உணவை முடிந்த வரை வீணடிக்காமல் உண்டு முடிக்க வேண்டும். சாப்பிடும் பதார்த்தங்களை முடிந்த அளவு கீழே சிந்தாத வகையில் பரிமாற வேண்டும். ஒரு வேளை உணவு அதிகளவில் மீந்து விட்டால் அதை யாசகர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் “பைரவரின்” வாகனமாகிய நாய்களுக்கு மீதமான உணவை கொடுக்க பைரவரின் அருளாசி கிடைத்து பல நன்மைகள் நமக்கு ஒவ்வொன்றாக ஏற்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.

kaala bairavar

ஒரு போதும் மீதமான உணவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது. இப்படிப்பட்ட செயல் மனிதர்கள் மற்றும் பிற உயிர்களின் பசியை போக்கும் “அன்னலட்சுமி தேவியின்” சாபத்தை பெற்று, ஒருவரின் தினசரி வாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்தும். சாப்பிட்ட பிறகு தட்டிலேயே நீரூற்றி கைகழுவுவது சிலரின் வாடிக்கையாக உள்ளது. இது தரித்தரத்தை உண்டாகும் ஒரு செயலாகும். பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் சிறு சிறு அனாவசிய செலவுகள் இச்செயலின் காரணமாக ஏற்படும்.

- Advertisement -

food

இரவு உணவை முடித்த பின்பு பாத்திரங்களை அப்போதே கழுவாமல், காலையில் கழுவி வைப்பது இன்று அதிகமான இல்லங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கமாக உள்ளது. தங்களின் வீடுகளில் “லட்சுமி கடாச்சம்” நிறைந்து இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் காலை, மதியம், இரவு என எந்த வேளை உணவு அருந்திய பின்பும் உடனுக்குடன் பாத்திரங்களை சுத்தமாக கழுவி வைக்கும் வாடிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இரவு சாப்பிட்டு முடித்த பின் சமையலறையை சுத்தமாக துடைத்து விட்டு உறங்க செல்ல வேண்டும். இவற்றை தவறாமல் கடைபிடிக்கும் போது உங்கள் இல்லங்களில் மங்கலங்கள் அனைத்தும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் பல பயனுள்ள தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -