விநாயகர் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்

vinayagar
- Advertisement -

நாம் வழிபடும் அனைத்து தெய்வத்தின் திருஉருவப் படங்களில் இருக்கும் ஆயுதங்களுக்கும், கருவிகளுக்கும் ஒவ்வொரு காரணங்கள் உள்ளது. அந்த வகையில் இன்று நாம் விநாயகரின் திருவுருவத்தில் உள்ள ஆயுதங்களைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மற்ற கடவுள் உருவங்களில் இருந்து மாறுபட்டு இருப்பவரே முழுமுதற் கடவுளான விநாயகர். அந்த விநாயகரை நம் மனதில் துதித்துக் கொண்டு இந்தப் பதிவினை காண்போம் வாருங்கள்.

Pillayarpatti Vinayagar

ஆணை முகத்தினை கொண்ட விநாயகருக்கு வலக்கண், இடக்கண், நெற்றிக்கண் என்ற மூன்று கண்களும், நான்கு திருக்கரங்களும், ஐந்தாவது கரமாக தும்பிக்கையும் உள்ளது. மேல் வலக்கரத்தில் யானையை அடக்கும் அங்குசத்தையும், மேல் இடக்கரத்தில் பாசக் கயிற்றையும், கீழ் வலக்கரத்தில் உடைந்த தந்தத்தையும், கீழ் இடக்கரத்தில் மோதகம் என்ற கொழுக்கட்டையும் வைத்துள்ளார். இதனுடன் பெரிய தொப்பை வயிற்றையும் கொண்ட விநாயகர் பெரிய ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

- Advertisement -

விநாயகரின் வடிவம் ஓம் எனும் குறியினை கொண்டுள்ளது. இது இந்து மதத்தின் ஆணி வேராகவும் திகழ்கின்றது. அவரின் வலது கண் சூரியனையும் இடது கண் சந்திரனையும், நெற்றிக்கண் அக்னியையும் குறிக்கின்றது. விநாயகருக்கு “சூர்யஅக்னிலோஸன்” என்ற இன்னொரு நாமத்தினால் விநாயகரின் மூன்று கண்களுக்கான அர்த்தத்தை நாம் உணர்கின்றோம்.

Vinayagar

அடுத்ததாக முறம் போன்ற காது உடையவன் விநாயகர் என்று கூறுவார்கள். “சூர்ப கர்ணன்” என்ற மற்றொரு பெயரும் விநாயகருக்கு உண்டு. சூர்பம் என்றால் முறத்தை குறிக்கும். கர்ணன் என்றால் காதினை குறிக்கின்றது. இந்தப் பெயர் அவருக்கு முறம் போன்ற காது என்பதை உணர்த்துகின்றது.

- Advertisement -

அடுத்ததாக ஐந்து திருக்கரங்கள்.
“ஐந்து கரத்தினை ஆணை முகத்தனை” என்ற துதி நாம் எல்லோரும் அறிந்தது. இது விநாயகரின் ஐந்து கரத்தினை உணர்த்துகின்றது. இந்த ஐந்து கரம் என்பது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்பதை குறிக்கின்றது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சிவன், சதாசிவன் இவர்களால் தான் இந்த ஐந்து செயல்களும் நடக்கின்றது. இந்த ஐந்து செயல்பாடுகளுக்கும் விநாயகர் மூலகாரணமாக திகழ்கின்றார். இந்த ஐந்து செயல்களும் நம் பூமியில் முறையாகத்தான் நடைபெறுகின்றது என்பதை விநாயகரின் ஐந்து கைகளும் உணர்த்துகின்றது.

vinayagar

அடுத்ததாக அவரது ஐந்து கைகளிலும் வைத்துள்ள பொருட்களின் அர்த்தத்தை பற்றி சற்று விரிவாக காண்போம். அவர் கையில் வைத்துள்ள உடைந்த தந்தம் ஆனது கஜமுகனை அழிப்பதற்காக உபயோகிக்கப்பட்டது. அதே தந்தத்தை மேருமலையில் வியாச முனிவர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை விநாயகர் எழுதுவதற்கு எழுது கோலாகவும் பயன்படுத்தியுள்ளார். அசுரர்களை அழிக்கும் போது ஆயுதமாகவும், எழுதும்போது எழுதுகோல் ஆகவும் பயன்படுத்தப்பட்டது தான் இந்த தந்தம்.

- Advertisement -

அடுத்ததாக மோதகம் என்பது பூரணம் வைத்தக் கொழுக்கட்டையை கூறுகின்றது. இந்த உலகத்தில் இறைவனின் சக்தி எந்த குறையும் இல்லாது பரிபூரணமானது என்பது தான் உண்மை. இப்படிப்பட்ட பரிபூரணமான சக்தியை நம்மால் காணமுடியாது. அந்த சக்தி உலக மாயையால் மூடப்பட்டுள்ளது. பூரணம் என்பது கடவுளாகவும் அதன் மேலே உள்ள மாவு என்பது மாயையாகவும் கருதப்படுகின்றது. இந்த மாயையை கடந்தால் தான் நம்மால் இறைவனின் சக்தியை காண முடியும் என்பதை இது உணர்த்துகின்றது.

அடுத்ததாக யானையை அடக்கும் அங்குசத்தை விநாயகர் கையில் வைத்துள்ளார். அங்குசம் என்பது யானையை கட்டுப்படுத்துவதற்காக மட்டும் அல்ல. நம் மனதை மதம் கொண்ட யானையாக மாற்றும் நம் ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகின்றது.

vinayagar

ஞானிகள் பசுக்களை, மனிதரோடு ஒப்பிட்டுக் கூறுகின்றனர். பசுக்களை கயிற்றினால் கட்டி விட்டால் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அதுபோல் சுதந்திர ஆன்மாவாகிய நாம் பாசபந்தம் என்னும் கயிற்றால் கட்டுப்பட்டு உள்ளோம். பந்த பாசங்களை விட்டு விட்டு இறைவனிடம் நம்மால் போக முடியாது. நம்மை கட்டியுள்ள பந்த பாசம் என்னும் பாசக்கயிற்றை தாண்டித் தான் நாம் இறைவனை அடைய முடியும் என்று இதன் பொருள்.

விநாயகரின் ஐந்தாவது கரம் தான் தும்பிக்கை. இடம்புரி விநாயகராக இருக்கும் போது “ஊ” என்ற(பிள்ளையார்சுழி) விநாயக மந்திரத்தையும், வலம்புரி விநாயகராக இருக்கும்பொழுது ஓம் என்ற மந்திரத்தையும் உணர்த்துவது தான் இந்த தும்பிக்கை. அடுத்ததாக விநாயகரின் பெரிய வயிறு. இது பரந்து விரிந்த உலகமான அண்டத்தை குறிப்பிடுகிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அண்டமாக கருதப்படும் இவரின் பெருத்த வயிற்றுக்குள் அடங்கும்.

இதையும் படிக்கலாமே
சிவன் பாம்பு உருவில் வந்து காட்சி தரும் அதிசய கோவில்

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vinayagar patriya thagavalgal. Vinayagar patriya seithigal. Lord vinayagar stories Tamil. Lord ganpati stories.

- Advertisement -