உன்னியப்பம் என்று சொல்லக்கூடிய, இனிப்பு பணியாரம் சூப்பரா, சாஃப்டா, ஈசியா எப்படி செய்வது? இப்பவே தெரிஞ்சுக்கலாமே!

paniyaram

கேரளா ஸ்பெஷல் என்று சொல்லப்படும் உன்னியப்பத்தை, நம் நாட்டில் இனிப்பு பணியாரம் என்று சொல்லுவார்கள். இதை சுவையாக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஸ்னாக்ஸ் உடலுக்கு ஆரோக்கியம் தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விருப்பமாக சாப்பிடுவார்கள். நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே, இந்த பணியாரத்தை சுவையாக செய்யலாம். இனிப்பு பரிகாரத்தை நம் வீட்டில் சுலபமாக எப்படி செய்வது? பார்த்து விடலாமா?

vellam

இனிப்பு பணியாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
step 1:
மாவு பச்சரிசி – 1/2 கிலோ, வெல்லம் –  1/2 கிலோ, சோடா உப்பு – 1/2 ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, தேங்காய் துருவல் – 1/4 கப், ஏலக்காய்த்தூள் – 1/2 ஸ்பூன், எள்ளு – 1/4 கப். பொரிப்பதற்கு தேவையான அளவு நெய் அல்லது சமையல் எண்ணெய். தேவைப்பட்டால், பழுத்த மஞ்சள் வாழை என்று சொல்லப்படும் பூவம் பழத்தை இந்த மாவோடு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

step 2:
முதலில் பச்சரிசியை நன்றாக கழுவி, 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். அரிசியோடு நறுக்கிய வெல்லத்தையும் சேர்த்து கொள்ளலாம். உங்களுடைய வெல்லம் தூசியாக இருந்தால், (அடுப்பில் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, சூடுபடுத்தி, வெல்லத்தை நன்றாக கரைத்து, வடிகட்டி அந்த தண்ணீரை அரிசியோடு சேர்த்து) நறநறவென்று அரைத்துக் கொள்ளவும். வாழைப்பழம் வாசம் உங்களுக்கு பிடித்தால் இந்த மாவோடு ஒரு வாழைப் பழத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் மாவு மொழு மொழு என்று அழிந்து விடக்கூடாது.

unniyappam recipe

step 3:
மிக்ஸி ஜாரிலிருந்து இந்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். மாவு கெட்டி பதத்தில் இருக்கக்கூடாது. தோசை மாவு பதத்தில் இலேசாக இருக்க வேண்டும். தயாராக இருக்கும் இந்த மாவில் ஒரு சிட்டிகை உப்பு, 1/2 ஸ்பூன் சோடா உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து ஒரு மூடி போட்டு, 1 மணி நேரம் வரை ஊற வைத்துவிடுங்கள். மாவு கொஞ்சமாக புளித்து வர வேண்டும். இது அப்படியே ஓரமாக இருக்கட்டும்.

- Advertisement -

step 4:
அடுத்ததாக, ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் துருவிய தேங்காய், எள்ளு போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். 2 நிமிடங்கள் வரை வழங்கினால் போதும். இந்த கலவையை தயாராக இருக்கும் மாவில் கொட்டி விட வேண்டும். (தேவைப்பட்டால் தேங்காயை துருவிக் கொள்ளாமல், கடித்து சாப்பிட, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டும் வதக்கி கொள்ளலாம்.)

paniyara-mavu1

step 5:
ஒரு மணி நேரம் கழித்து, இப்போது மாவு தயாராக உள்ளது. மாவு அரைத்த பின்பு, கட்டாயம் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் பணியாரம் மேலே எழும்பி வரும். அடுப்பில் பணியார கல்லை வைத்து விடுங்கள். அது சூடான பின்பு, ஒரு ஸ்பூன் அளவு நெய் அல்லது எண்ணெய் தேவைப்பட்டால் இரண்டையும் சேர்த்து கூட பணியாரக் கல்லில் ஊற்றி கொள்ளலாம்.

unniyappam

அடுத்தபடியாக தயாராக இருக்கும் மாவை கரண்டியில் எடுத்து, பணியாரக் கல்லில் பாதி அளவு ஊற்றினால் போதும். அது நன்றாக மேலே எழும்பி வரும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும். தீயை அதிகமாக வைத்து விட்டால் மேலே கருகிவிடும். உள்ளே வேகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

unniyappam1

தேவைப்பட்டால் இந்த பணியாரத்திற்கு வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். இந்த பணியாரத்தை சுடும்போது வாசனை மூக்கைத் துளைக்கும். அந்த அளவிற்கு ருசியும் அதிகமாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை, உங்கள் வீட்டில் முயற்சி செய்து தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
அட, கோதுமை மாவு மட்டும் இருந்தா, இந்த பிஸ்கட்டை நம்ம வீட்லயே இவ்வளவு ஈசியா செஞ்சிடலாமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.