இனி பாத்ரூமில் உப்பு கறை சீக்கிரமாக படியவே படியாது. ஒரே ஒருமுறை இந்த பொடியை போட்டு தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள். அது என்ன பொடி உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கா?

bathroom
- Advertisement -

எல்லோர் வீட்டு குளியல் அறை, கழிவரையிலும் இருக்கக்கூடிய பிரச்சனை தான் இது‌. உப்பு கறை படிந்து, பாத்ரூமை பார்ப்பதற்கே அசுத்தமாக இருக்கும். ஆசிட் ஊற்றி சுத்தம் செய்தால் அலர்ஜி, சுவாச பிரச்சனையை கொடுத்து விடும். நம்முடைய உடலில் இருக்கும் உள்உறுப்புக்கும் பாதிப்பை கொடுத்து விடும். ஆகவே, ஆசிட் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. சில பேருக்கு மூச்சு திணறல் கூட இதனால் வரும். ஆகவே, பக்க விளைவுகள் இல்லாமல் உப்பு கறை படிந்த பாத்ரூமை எப்படி சுத்தம் செய்யலாம். அதுவும் கை வலிக்காமல் சுத்தம் செய்ய ஒரு எளிய வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

பாத்ரூமில் நிறைய உப்பு கறை படியாமல் இருக்க வேண்டும் என்றால் பாத்ரூமை மாதத்திற்கு ஒரு நாள் டீப் கிளீனிங் செய்ய வேண்டும். இல்லை என்றால் உப்பு கறை படிந்து தான் போகும். அடர்த்தியாக படிந்த உப்பு கறைகளை அவ்வளவு எளிமையாக நீக்க முடியாது. மாதத்திற்கு ஒரு முறை பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி பாத்ரூமில் சுத்தம் செய்து பாருங்கள். உங்கள் பாத்ரூமில் மீண்டும் மீண்டும் உப்பு கறை படியாமல் இருக்கும்.

- Advertisement -

பாத்ரூமில் இருக்கும் உப்பு கறை நீங்க செய்யகாய் தூள்:
இந்த குறிப்புக்கு நாம் சீக்ரெட் ஆக பயன்படுத்த போகும் முதல் பொருள் சீயக்காய் தூள் தான். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சீயக்காய் தூள் 4 டேபிள் ஸ்பூன், சோடா உப்பு 4 டேபிள் ஸ்பூன், எலுமிச்ச பழச்சாறு 4 டேபிள் ஸ்பூன், நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு 2 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள். (உங்க பாத்ரூமில் இருக்கும் உப்பு கறைகளுக்கு ஏற்ப மேல் சொன்ன பொருட்களை கூட்டியோ குறைத்தோ போட்டுக் கொள்ளலாம்).

இந்த கலவையை அப்படியே உங்களுடைய பாத்ரூம் டைல்ஸில் தடவி விடுங்கள். ஒரு நாரை தொட்டு இந்த பேஸ்ட்டை டயில்ஸ் முழுவதும் தடவி விட்டால் போதும். 10 நிமிடங்கள் உப்பு கறை இந்த பேஸ்ட்டில் ஊறிய பின்பு, கறை படிந்த இடத்தை எல்லாம் லேசாக தண்ணீரை தெளித்து நினைத்து விட்டு ஸ்கிரப்பரை வைத்து கொஞ்சமாக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும். டயல்ஸில் இருக்கும் உப்பு கறை அனைத்தும் நீங்கிவிடும்.

- Advertisement -

இதே போல உங்க வீட்டு பாத்ரூம் தரையில் உப்பு கறை அதிகமாக படிந்து இருந்தால் கூட, இந்த பேஸ்ட்டை ஈரம் இல்லாத தரையில் தடவி விட்டு பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதன் பின்பு பிரஷை கொடுத்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்த்தாலே எல்லா கறையும் சுத்தமாக நீங்கிவிடும்.

ரொம்பவும் அதிகமாக உப்பு கறை படிந்து இருந்தால் ஒவ்வொரு முறை இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி சுத்தம் செய்யும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக உப்பு கறை நீங்கிவிடும். தொடர்ந்து வாரம் ஒரு நாள் இப்படி செய்து, பாத்ரூமில் இருக்கும் எல்லா உப்பு கறையையும் சுத்தம் செய்து விடுங்கள். அதன் பின்பு மாதம் ஒருமுறை மேல் சொன்ன குறிப்பை பின்பற்றி பாத்ரூமில் சுத்தம் செய்து வர, உங்க வீட்டு பாத்ரூம் எப்போதும் பளிச் பளிச்சென்று இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கத்திரிக்காய் மசாலா கிரேவியை ஒரு முறை இப்படி செஞ்சி குடுத்தீங்கன்னா, கத்திரிக்காயே பிடிக்காது என்பவர்களுக்கு கூட, இது பெவரிட் டா இருக்கும். பிரியாணி முதல் தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் ஏற்ற பக்கா சைடு டிஷ்.

இது அல்லாமல் அடிக்கடி பாத்ரூமில் ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பாத்ரூமில் இருந்து கெட்டவாடை வீசாது. பாத்ரூம் கொழ கொழப்பாக இருக்காது. பாத்ரூமுக்குள் எந்த பூச்சி பொட்டும் வராது. உங்களுக்கு மேல் சொன்ன குறிப்பு பயனுள்ளதாக இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -