உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை பளிச்சுன்னு மாத்த கொஞ்சமா டானிக் கொடுங்க. என்னது! டைல்ஸ் வெள்ளையாக டானிக் கொடுக்கணுமா? இது என்ன புதுசா இருக்கு இப்படியே யோசிக்காம வாங்க அது என்னன்னு தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

பாத்ரூமில் படிந்திருக்கும் உப்பு கறைகளை நீக்குவது என்பது சாதாரண காரியமே கிடையாது. தினமுமே தேய்த்து தேய்த்து சுத்தம் செய்தால் கூட உப்பு தண்ணீரினால் ஏற்படும் இந்த கறை மறுபடியும் வரத் தான் செய்கிறது. கடுமையான உப்பு கறை பாத்ரூம் டைல்ஸ் கூட எளிமையாக சுத்தம் செய்வதற்கான ஒரு வழியை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த முறையை வீட்டில் இருக்கும் கறை படிந்த டைல்ஸ், சிங்க், பைப், பாத்ரூம் டைல்ஸ் என அனைத்து இடத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த அளவிற்கு உபயோகமான ஒரு குறிப்பை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்ய:
இந்த முறையில் சுத்தம் செய்வதற்கு உங்கள் வீட்டில் தேவையற்ற மாத்திரைகள் இருந்தால் அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பாராசிட்டமல் மாத்திரையை கட்டாயமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மாத்திரைகளை எல்லாம் பொடித்து தூளாக்கிய பிறகு ஒரு கால் கப் வெதுவெதுப்பான தண்ணீரில் இந்த தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். அது நன்றாக கரைந்து விடும். அதன் பிறகு நீங்கள் வீட்டில் தரையை துடைக்க பயன்படுத்தும் லைசாலை சிறிதளவு இந்த தண்ணீரில் ஊற்றி நன்றாக கலந்த பிறகு இதை ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்.

இந்த பாட்டிலில் உள்ள லிக்விடை கறை படிந்த சிங் பாத்ரூம் டைல்ஸ் போன்றவற்றில் எல்லாம் ஸ்பிரே செய்து கொஞ்ச நேரம் கழித்து துடைத்து விட்டால் போதும். அப்படியே பளிச்சென்று மாறி விடும். இதற்கு அதிகமாக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டிய அவசியம் கிடையாது.

- Advertisement -

இதில் நாம் தேய்க்க அதிக சிரமப்படும் இன்னொரு இடம் டாய்லெட் தான். இதற்கும் நாம் மருந்தையே கொடுக்கலாம். அதற்கு மாத்திரை வேண்டாம் நாம் வீட்டில் குழந்தைகளுக்கு சளி இருமலுக்கு பயன்படுத்தும் மருந்து அல்லது பாரசிட்டமில் போன்ற டானிக்கில் எது இருந்தாலும் அதை எடுத்து டாய்லெட்டில் ஊற்றி அப்படியே விட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து லேசாக தேய்த்துப் பாருங்கள். கறைகள் அனைத்தும் நீங்கி டாய்லெட் பளிச் சென்று மாறி விடும். இந்த மருந்துகளில் அமிலத்தன்மை உள்ளதால் இது போன்ற கறைகளை எல்லாம் சுத்தம் செய்ய பெரிதும் உதவி செய்யும். இதற்கு புதிதாக வாங்கியதை தான் பயன் படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் பழைய காலாவதி ஆன மருந்துகளையே பயன்படுத்தலாம்.

சாதாரணமாக நாம் பாத்ரூமை சுத்தம் செய்வதாக இருந்தால் அதற்கான லிக்வீட் ஊற்றி ஊற வைத்து ப்ரஷ் வைத்து கை வலிக்க தேய்த்தால் தான் கொஞ்சமாவது அதன் நிறம் மாறும். இந்த முறையில் அப்படி நாம் அதிகம் சிரமப்படாமல் ரொம்பவே சுலபமாக அதுவும் அதிகமான உப்பு கறை படிந்த பாத்ரூமில் கூட பளிச் சென்று மாற்றி விடலாம்.

இதையும் படிக்கலாமே: சம்மருக்கு ஏற்ற செம ஐடியாங்க இது. இந்த காலியான பவுச்சை இனி குப்பைத் தொட்டியில் பார்த்தால் கூட, யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்து பீரோவில் பூட்டி வச்சுக்குவீங்க.
இந்தக் குறிப்பு அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் உப்பு தண்ணீர் தான் எனவே பாத்ரூம் கறை இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த குறிப்பை தெரிந்து கொண்டால் அதை சுத்தம் செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

- Advertisement -