உப்பு கறை நீங்க பாத்ரூமை சுத்தம் செய்யும் முறை

toilet
- Advertisement -

வரக்கூடிய பொங்கலுக்கு வீடு முழுவதையும் தலைகீழாக புரட்டிப் போட்டு சுத்தம் செய்திருப்போம். ஆனால் இந்த கழிவறையை மட்டும் முழுசாக சுத்தம் செய்திருக்க மாட்டோம். குளியலறை கழிவறை, இந்த இரண்டிலும் முழு சுத்தம் இருந்தால் தான், நம் வீட்டின் சுத்தம் முழுமை அடையும். உங்க வீட்டு பாத்ரூமை இந்த பொங்கலுக்கு, இந்த முறைப்படி சுத்தம் செய்து பாருங்களேன்.

பாத்ரூமில் இருக்கும் உப்பு கறை அனைத்தும் நீங்கி புது பாத்ரூம் போல ஜொலி ஜொலிக்கும். அது மட்டும் இல்லாமல் மீண்டும் மீண்டும் பாத்ரூமில் உப்பு கறையானது நீண்ட நாட்களுக்கு படியாமலும் இருக்கும். அந்த எளிய வீட்டு குறிப்பு என்ன இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பாத்ரூம் உப்பு கறையை நீக்க எளிய வீட்டு குறிப்பு

பாத்ரூமில் சுத்தம் செய்ய நாம் பயன்படுத்த போகும் பொருள் 2. ஈனோ சால்ட், துணி துவைக்கும் பவுடர் அல்லது லைசால். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று பயன்படுத்தினால் போதும். துணி துவைக்கும் லிக்விடை கூட இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்தலாம். ஈனோசால்ட் அவசியம் தேவை. துணி துவைக்கும் பவுடர் அல்லது லைசால் இந்த இரண்டில் எதை வேண்டுமென்றாலும் ஈனோசால்டோடு நீங்கள் கலந்து கொள்ளலாம்.

ஒரு பக்கெடில், 1 ஸ்பூன் துணி துவைக்கும் பவுடர், 2 ஸ்பூன் ஈனோ சால்ட், போட்டு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்து விடுங்கள். உங்கள் வீட்டு பாத்ரூமுக்கு ஏற்ப இந்த பொருட்களின் அளவை கூடவோ குறைத்தோ சேர்க்கலாம். இதில் 1/4 பக்கெட் அளவு தண்ணீரை பிடிக்கலாம். இந்த தண்ணீரை உங்கள் பாத்ரூம் முழுவதும் பரவலாக ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

15 நிமிடம் ஊறிய பின்பு சாதாரணமாக பாத்ரூம் கழுவும் பிரஷை வைத்து பாத்ரூம் டாயல்டஸ் டாய்லெட் பகுதி எல்லாவற்றையும் லேசாக அழுத்தம் கொடுத்து தேய்த்தாலே போதும். அழுக்கும் உப்பு கறையும் சுலபமாக நீங்கிவிடும்.

ரொம்ப நீண்ட நாட்களாக உப்பு கறை படிந்து இருக்கிறது. உப்பு கறை ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்கு என்றால் குறைந்த அளவு தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களையும் கலந்து, ஒரு வாட்டர் கேனில் ஊற்றி, அந்த வாட்டர் கேன் மூடியில் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டு பாத்ரூமில் எந்த இடத்தில் எல்லாம் உப்பு கறை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் ஸ்ப்ரே செய்து விடுங்கள்.

- Advertisement -

15 நிமிடம் ஊறிய பிறகு டயல்சில் ஸ்டீல் நாரை வைத்து லேசாக தேய்த்து எடுக்கவும். தரையையும் ஸ்டீல் நாரை வைத்து தேய்த்துக் கொடுத்தால், உப்பு கறையெல்லாம் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. சுலபமான வழி தான். இந்த முறையில் வருடத்தில் இரண்டு முறை உங்கள் டாய்லேட்டை சுத்தம் செய்தாலே போதும்.

இதையும் படிக்கலாமே: வாழை இலையை வார கணக்கில் வாடாமல் பாதுகாக்க ஐடியா

டாய்லெட் பாத்ரூமில் உப்பு கறை படியாமல் சுத்தமாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். பாத்ரூம் சுத்தம் செய்யும் இந்த வீட்டுக் குறிப்பு இந்த பொங்கலுக்கு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -