வாழை இலையை வார கணக்கில் வாடாமல் பாதுகாக்க ஐடியா

vazhai-ilai
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு சமையலறை வேலையை பக்குவமாக செய்வதற்கு ஒரு திறமை தேவை. வாங்கிய பொருட்களை கெட்டுப் போகாமலும் பாதுகாக்க வேண்டும், அதே சமயம் பொருட்களை ஸ்டோர் செய்து வைப்பதன் மூலமாக, ஆரோக்கியத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது. அதற்கு இல்லத்தரசிகளும் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும்.

அவர்களுடைய ஐடியாவும் ஸ்மார்ட்டா இருக்கணும். அந்த வரிசையில் இன்று இல்லத்தரசிகளுக்கு தேவையான ஐந்து ஸ்மார்ட் குறிப்புகளைத்தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த வீட்டு குறிப்பு நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் பதிவிற்குள் பயணம் செய்வோமா.

- Advertisement -

வாழை இலை வாடாமல் இருக்க:

பொதுவாகவே வாழையிலேயே வாங்கிய இரண்டே நாட்களில் பயன்படுத்திவிட வேண்டும். இல்லை என்றால் அது காய்ந்து போய்விடும். இதை எப்படி ஸ்டோர் செய்வது. ஒரு நியூஸ் பேப்பரில் நன்றாக சுருட்டி ரப்பர் கண் போட்டு வைத்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வாடாமல் இருக்கும். அப்படி இல்லை என்றால் பிரவுன் கலரில் பெரிய பேப்பர் கவர் இருக்கும். புடவை எடுத்தால் அந்த கவருக்குள் வைத்து தருவார்கள். சில துணிமணிகளை அந்த கவரில் பேக் செய்து கொடுப்பார்கள்.

மாத்திரை கவர் போலவே பெரிய சைஸில் கொஞ்சம் திக்கான பேப்பர் கவர். அந்த கவருக்குள் வாழ இலைகளை வைத்து, மேல் பக்கம் காற்று போகாமல் மடித்து விட வேண்டும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்ய வேண்டும். பிரிட்ஜில் நடுப்பக்கத்தில் இரண்டு ட்ரேக்களுக்கு நடுவில் இந்த வாழை இலையை வைக்கவும். மேல் பக்கத்தில் வைத்தாலும் பிரிட்ஜில் இருந்து விடும் தண்ணீர் பட்டு வாழை இலை அழுகிவிடும். இப்படி வாழ இலைகளை ஸ்டோர் செய்தால் பத்து நாட்கள் ஆனாலும் வாழை இலை வாடி போகாது.

- Advertisement -

சிங்க் குப்பையாகாமல் இருக்க:

ஒரு பிளாஸ்டிக் கப் எடுத்துக்கோங்க. அந்த கப்பில் அடிப்பக்கத்திலும் கப்பை சுற்றி இருக்கும் பகுதியிலும், சின்ன சின்ன ஓட்டைகளை போட்டுக்கோங்க. அந்த பிளாஸ்டிக் கப்புக்கு 2 பக்கமும் ஓட்டையை போட்டு, ஒரு நூலால் கட்டிக்கோங்க. சிங்குக்கு மேலே ஒரு டபுள் டேப்பை ஒட்டி அதில் இந்த நூலையும் ஒட்டி விடுங்கள்.

பிளாஸ்டிக் கப் சிங்குக்கு உள்ளே தொங்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சிங்கக்கு உள்ளே பாத்திரங்களை போடும்போது, அதில் இருக்கும் உணவு குப்பைகளை, தண்ணீர் ஊற்றி அலசி இந்த டப்பாவுக்குள் ஊற்றினால், டப்பாவில் குப்பைகள் இன்று விடும். தண்ணீர் மட்டும் வடிந்து சிங்குக்குப் போகும். குப்பைகள் எல்லாம் இந்த டப்பாவிலேயே நின்றுவிடும்.

- Advertisement -

எண்ணெய் பசை போக ஸ்டவ்வை சுத்தம் செய்யும் முறை

ஒரு சின்ன கப்பில் 1 ஸ்பூன் ஷாம்பூ, 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஸ்டோர் செய்யவும். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஸ்டவ், சமையல் மேடை, சுவரில் இருக்கும் டயல்ஸை இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து வெறும் துணையால் துடைத்து எடுங்க. எண்ணெய் பசையும் அந்த இடத்தில் இருக்காது. ஈ, எறும்பு, கொசு கரப்பான் பூச்சி தொல்லையும் வராது.

வெல்லம்:

சில வெல்லக் கட்டிகளை உடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதாவது ஜாங்கு போல அந்த வெல்லம் பிசுபிசுப்பாக ஒட்டும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதை உடைக்க முடியாது. இப்படிப்பட்ட வெல்லத்தை கேரட் பீட்ரூட் துருவலை வைத்து துருவினால் சீக்கிரமாக வெல்ல பொடி நமக்கு கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஆந்திரா ஸ்டைல் எள்ளு சட்னி செய்முறை

அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய

சில சமயம் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தீய விட்டு விடுவோம். உதாரணத்திற்கு குழம்பு சூடு பண்ணும் போதோ அல்லது, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் தீர்ந்து போய், அந்த பாத்திரம் அடியில் கருப்பாக மாறிவிடும். பாத்திரம் எப்படி அடி பிடித்தாலும் பரவாயில்லை. அதில் உள்ளே துணி துவைக்கும் லிக்விட் அல்லது பவுடர் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். பிறகு அதே தண்ணீரில் ஸ்டீல் நாரை போட்டு நன்றாக தேய்த்து கழுவினால் பாத்திரம் பளபளப்பாகும்.

- Advertisement -