உடலுக்கு வலு சேர்க்கும் கருப்பு உளுந்தில் அருமையான அடை தோசை.

- Advertisement -

தானிய வகைகளில் உளுந்தை போல தெம்பை கொடுக்கக் கூடிய உணவு வேறில்லை. அதிலும் இந்த கருப்பு உளுந்தை சேர்த்து செய்யும் பொழுது பெண்களுக்கு இருக்கும் அநேக பிரச்சனைகளை தீரும். அத்தகைய சத்து மிக்க அடை தோசையை பெண்கள் மட்டும் அல்ல சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண் பெண் அனைவரும் சாப்பிடலாம். ஆரோக்கியத்திற்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி -1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
கடலைப்பருப்பு -2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கருப்பு உளுந்து – 1/4 கப் உடைத்தது
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு

- Advertisement -

செய்முறை

முதலில் இட்லி அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு அரிசி பருப்பு முழுங்கும் வரை தண்ணீர் ஊற்றி இதை மூன்று மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

அடுத்து உடைத்த கருப்பு உளுந்தை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு ஒரு ஜல்லியில் தண்ணீர் முழுவதும் வடிய விட்டு அப்படியே ஊற விடுங்கள். இதை தனியாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்க கூடாது. வடிகட்ட நிலையில் ஊற வேண்டும்.

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், உளுந்து இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து ஏற்கனவே ஊற வைத்த அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்து மீண்டும் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சர்க்கரை வள்ளி கிழங்கில் அட்டகாசமான ஒரு பாயாசம் ரெசிபி

அடுத்து மிளகு சீரகத்தை ஒன்றும் பாதியுமாக தட்டி அதையும் இந்த மாவில் கலந்து பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் தோசை கல் வைத்து நன்றாக சூடான உடன் இந்த மாவு எடுத்து நல்ல மொறு மொறு தோசையாக ஊற்றி எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சிவந்ததும் எடுத்து விட்டால் கருப்பு உளுந்து அடை தோசை தயார்.

- Advertisement -