தாறுமாறா மொட்டுக்கள் வைக்க உங்க ரோஜா செடிக்கு வீணா போன உபயோகமில்லாத உளுந்து இருந்தா போதுமே!

rose-plant-urad-dal
- Advertisement -

ரோஜா செடியில் மொட்டுக்கள் அதிகம் வருவது நம் கையில் தான் இருக்கிறது. சிலருடைய வீடுகளில் ரோஜா செடிகள் கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்கும். ஒரு கிளையிலேயே 10 பூக்கள் கூட பூப்பது உண்டு. ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடியில் அதிகம் பூக்கள் பூக்கவில்லை என்றால், நீங்கள் சரியான சத்துள்ள உரம் கொடுக்கவில்லை என்பது தான் அர்த்தம். ரோஜா செடிகளுக்கு தேவையான உரம் கொடுக்க நாம் அதிக அளவு செலவு செய்ய வேண்டியது கிடையாது.

நம் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரோஜா செடிக்கு மிகப் பெரிய உரமாக மாறும். அந்த வகையில் உளுந்து எப்படி ரோஜா செடிக்கு உரமாக மாறுகிறது? இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை தான் தோட்ட குறிப்பாக இப்பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

ரோஜா செடியை பொறுத்த வரை அதற்கு கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் தேவை. முட்டை ஓடு, டீ தூள் போன்றவற்றை அதிகம் உரமாக போடுவது ரோஜா செடிக்கு தான். வாழைப்பழ தோல், காய்கறி மற்றும் பழக்கழிவுகள் கூட ரோஜா செடிகளுக்கு உரமாக போடலாம். மாட்டு சாணத்தை நன்கு தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரையும் ரோஜா செடிகளுக்கு ஊற்றி வரலாம். அது மட்டும் அல்லாமல் இதற்கு நிறைய மொட்டுக்கள் வைப்பதற்கு உளுந்தில் இருக்கும் சத்துக்களும் வெகுவாக பயன்படுகிறது.

உளுந்து விற்கும் விலைக்கு உளுந்தை எப்படி வீணாக்குவது? என்று யோசிக்க வேண்டாம். நம்மிடம் பழைய உளுந்து இருந்தால் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். சிலரிடம் பயன்படுத்தாத உளுந்து இருக்கும். அதை நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்த முடியாது. பூச்சிகள் வந்துவிடும் அல்லது மாவாகிவிடும் எனவே இந்த தேவைபடாத, பயன்படாத உளுந்தை நீங்கள் மாவு போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உளுந்த மாவை ஒவ்வொரு செடிகளுக்கும் ரெண்டு ஸ்பூன் வீதம் கொடுத்தால் போதும், உங்களுடைய செடிகள் தாறுமாறாக துளிர்க்க ஆரம்பிக்கும். ஒவ்வொரு தளிரிலும் நிறைய மொட்டுக்கள் பூக்கும், கிளைகள் அதிகம் உருவாகும்.

- Advertisement -

பூக்காத உங்களுடைய செடியும் பூத்து குலுங்குவதற்கு இந்த உரம் ரொம்பவே உபயோகமாக இருக்கும். உளுந்தில் இருக்கும் ஏராளமான நுண்ணுயிர் சத்துக்கள் ரோஜா செடிக்கு நல்ல ஒரு வளர்ச்சி ஊக்கியாக இருந்து செயல்படும். இது மண்ணின் வளத்தையும் அதிகரிக்கும், எனவே நீங்கள் ரோஜா செடிக்கு உரமாக கொடுக்கும் பொழுது வேரை சுற்றிலும் நன்கு மண்ணை முதலில் தளர்வாக கிளறி விட வேண்டும். அப்பொழுது தான் சத்துக்கள் முழுமையாக சென்றடையும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டு செடிகள் நன்றாக பூத்து குலுங்க. நீங்கள் வேண்டாம் என கீழே தூக்கி போடும் இந்த பொருளை புதைத்து வைத்தாலே போதும்.

மண்ணை காற்றோட்டமாக நன்கு கிளறிய பின்பு வேரை சுற்றிலும் மண்ணில் எல்லா பகுதியிலும் லேசாக தூவி விட வேண்டும். ஒரு பெரிய ரோஜா செடிக்கு இரண்டு ஸ்பூன் உளுந்த மாவு கொடுத்தால் போதும். இதை வாரம் ஒரு முறை கொடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து கொடுத்து வந்தால் உங்களுடைய செடியிலும் கொத்து கொத்தாக மொட்டுக்கள் வைக்க ஆரம்பிக்கும். அதன் பிறகு என்னங்க, உங்களுக்கு பிடித்த கலரில் உங்களுடைய ரோஜா செடி உங்களுக்கு பூக்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். அது மலர்வதை பார்த்து நீங்களும் ரசிக்கலாமே!

- Advertisement -