உங்கள் வீட்டு செடிகள் நன்றாக பூத்து குலுங்க. நீங்கள் வேண்டாம் என கீழே தூக்கி போடும் இந்த பொருளை புதைத்து வைத்தாலே போதும்.

- Advertisement -

வீட்டில் செடிகள் வளர்க்க ஆசைப்படுபவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அந்தச் செடிகளை எப்படி பராமரிக்க வேண்டும், எந்த மாதிரியான உரங்களை கொடுத்தால் செடி நன்றாக வளரும் என்பது தான். உரங்கள் அனைத்தையுமே கடையில் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் கழிவுகளே போதும் செடிகள் செழித்து வளர, அதை சரியான முறையில் எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் செடிகள் நன்றாக வளர்ந்து வரும். அப்படி ஒரு உரத்தை தயாரிக்கும் முறையைப் பற்றிதான் இந்த பதிவு.

நம் அனைவர் வீட்டிலும் நிச்சயமாக தேங்காய் சேர்த்து சமைப்போம் அதில் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் தேங்காய் அரைக்கும் போது அதன் திப்பி எடுத்து விட்டு சாறு மட்டுமே சேர்கிறார்கள். இப்படி வீணாக தூக்கிப் போடும் அந்த தேங்காய் திப்பியை வைத்து தான் இப்பொழுது செடிகளுக்கான ஒரு உரத்தை தயார் செய்யப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு அதிகமாக ஒன்றும் செலவு செய்ய வேண்டியதில்லை. அரை மூடி தேங்காய் அரைத்து சாறு எடுத்த பிறகு மீதம் இருக்கும் திப்பி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த திப்பியில் ஐந்து சொட்டு எலுமிச்சை சாறு கலந்து விடுங்கள். தேங்காயில் இனிப்பு தன்மை இருக்கும் அதை நாம் செடிகளுக்கு கொடுக்கும் போது எறும்புகள் வந்து விடும் வாய்ப்பு அதிகம் உண்டு. அதில் இந்த எலுமிச்சை சாறு சேர்க்கும் பொழுது இதன் அமிலத்தன்மை எறும்புகள் வராமல் தடுக்கும் இதனால் செடிகளுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. பொதுவாகவே எலுமிச்சை பழ தோல் எலுமிச்சை பழ தோல் ஊற வைத்த தண்ணீர் இவை எல்லாமே செடிகளுக்கு நல்ல உரம் தான். அதனால் தாராளமாக எலுமிச்சை பழச்சாறை இந்த தேங்காய் திப்பியில் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கையும் சேர்த்து கலந்து வைத்து விடுங்கள்.

இதை ஒரு சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்து வெயிலில் காய வைத்து கொள்ளுங்கள். இதை உருண்டையாக பிடித்து வைத்துக் கொண்டால் உங்களுக்கு செடிகளுக்கு உரம் வைக்கும் போது சுலபமாக இருக்கும்.

- Advertisement -

நன்றாக காய்ந்த இந்த உருண்டைகளை ஒரு செடிக்கு ஒரு உருண்டை வீதம் வாரம் ஒரு முறை இதை கொடுத்து வந்தால் செடிகள் நன்றாக புதிய கிளைகள் விட்டு பூத்து குலுங்கும். இது பூச்செடிக்கு மட்டுமின்றி மற்ற செடிகளுக்கும் கூட இந்த உரத்தை பயன்படுத்தலாம்.

இந்த உரத்தை கொடுக்கும் நேரம் காலை வெயிலுக்கு முன்பு கொடுத்து விடுங்கள், அல்லது மாலை வெயில் இறங்கிய பிறகு கொடுத்து விடுங்கள். தொட்டியில் லேசாக பள்ளம் தோண்டி இந்த ஒரு உருண்டை வைத்து மணல் போட்டு மூடி விட்டு எப்போதும் போல் தண்ணீர் ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தலைக்கு பயன்படுத்தும் இந்த ஒரு பொருளை வைத்து வெறும் குச்சாக மாறிப் போன ரோஜா செடியை கூட கொத்து கொத்தாக பூக்க வைக்கலாம்.

இது போல் வாரம் ஒரு முறை செய்தாலே போதும் உங்கள் செடிகள் நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கு வளர்ச்சி அடைந்து பூத்து காய்த்து அழகாக காட்சியளிக்கும். இந்த சுலபமான உரத்தை நீங்களும் உங்கள் வீட்டில் தயார் செய்து உங்கள் செடிகளுக்கு கொடுத்துப் பாருங்கள்.

- Advertisement -