மேகி மட்டும் இல்லைங்க இப்போ இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் கூட ரெண்டு நிமிஷத்துல செஞ்சிடலாம். ரெண்டே நிமிஷத்துல நல்ல மொறு மொறுன்னு கிரிஸ்பியான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யலாம் வாங்க.

- Advertisement -

முன்பெல்லாம் சிப்ஸ் என்றாலே அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது உருளைக்கிழங்கு சிப்ஸ் மட்டுமே சிப்ஸ் வகைகள் நிறைய இருந்தாலும் ஏனோ இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை தனி இடத்தை பிடித்துக் கொண்டே இருக்கிறது ஏனென்றால் இதன் சுவை அப்படி இதைப் பிடிக்காது என்று கூறுபவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள் அப்படி அனைவரின் விருப்பமான இந்த உருளைக்கிழங்கை சிப்ஸ் நாம் வீட்டில் மிக மிக எளிமையாக சீக்கிரமாகவும் செய்வது எப்படி என்பதை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த சிப்ஸ் செய்வதற்கு உருளைக்கிழங்கை நல்ல இனிப்பில்லாத உருளைக்கிழக்காக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லாம் உருளைக்கிழங்கு இனிப்பு சுவையுடன் வருகிறது அந்த உருளைக்கிழங்கல் சிப்ஸ் போட்டால் நன்றாக இருக்காது. எனவே இனிப்பில்லாத உருளைக்கிழங்காக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த உருளைக்கிழங்கை வாங்கி மேலே உள்ள தோலை சீவி எடுத்துக் கொள்ளுங்கள். தோல் சீவிய பிறகு இதை கழுவ வேண்டிய அவசியமில்லை.

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள். எண்ணெய் நல்ல சூட்டுடன் இருந்தால் தான் இந்த உருளைக்கிழங்கு போட்டவுடன் நன்றாக பொரியும்.

- Advertisement -

இப்போது காய் சீவும் சீவலில் இந்த உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக சீவி எடுத்து அதை எண்ணெயில் போட்டு பொரிக்க விடுங்கள்.

சமையலில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் எண்ணெயில் நேரடியாகவே இந்த உருளைக்கிழங்கை சீவி போட்டு விடலாம். ஆனால் எண்ணெய் மேலே தெறிக்காமல் கவனமாக செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு தட்டை வைத்து அதில் உருளைகழங்கை சீவி அதன் பிறகு எண்ணெயில் போட்டு பொரிக்கலாம்.

- Advertisement -

உருளைக்கிழங்கு போட்ட பிறகு அதன் சலசலப்பு அனைத்தும் அடங்கி கிழங்கு மேலே வந்து நின்றவுடன், உருளைக்கிழங்கை எடுத்தால் போதும் அப்போது தான் நல்ல மொறுமொறுப்பு தன்மையுடன் இருக்கும்.

இப்போது இதை ஒரு பவுலில் கொட்டி இதற்கு கொஞ்சம் உப்பு, தனி மிளகாய் தூள் கொஞ்சம் சேர்த்து நன்றாக குலுக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இதோ நல்ல மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாராகி விட்டது. இதை செய்ய அதிக நேரம் எடுக்காது அதை நேரத்தில் சுவையும் நன்றாகவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் கறி சுவையை மிஞ்சும் கருணைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது? இது தெரிஞ்சா இனி கருணைக்கிழங்கு வாங்கினாலே இப்படித்தான் செய்வீங்க!

இவ்வளவு ஈசியாக இந்த சிப்ஸ் செய்ய முடியும் எனும் போது இனி கடைகளில் அதிக விலை கொடுத்து இதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை தானே நீங்களும் உங்கள் வீட்டில் இது போல செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். கடையில் எந்த எண்ணையை பயன் படுத்துகிறார்கள் என்று தெரியாது. வீட்டில் எனவே முடிந்த அளவு எது போன்றவைகளை குழந்தைகளுக்கு வீட்டில் செய்து குடுத்து பழகுங்கள்.

- Advertisement -