குக்கரில் மூனே விசில் விட்டால் போதும் அட்டகாசமான உருளைக்கிழங்கு குருமா ரெடி. இதுக்கு முன்னாடி கறிக் குருமாவே தோத்து போயிடும். சப்பாத்தி பூரி இட்லி தோசை எத செஞ்சாலும் இந்த குருமா வச்சு அசத்துங்க.

potato kuruma recipe
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுக்கு என்ன தான் வகை வகையான சைடு டிஷ்கள் இருந்தாலும் கூட, கறி குருமா வைத்து சாப்பிடும் போது கூட ரெண்டு சாப்பிடவே செய்வார்கள். ஏனென்றால் அசைவத்திற்கு அப்படி ஒரு ஈர்ப்பு உண்டு. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான குருமாவை உருளைக்கிழங்கை வைத்து எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த குருமா செய்ய முதலில் அடுப்பில் குக்கர் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், ஒரு பட்டை, இரண்டு லவங்கம், ஒரு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, அரை ஸ்பூன் சோம்பு இவை எல்லாம் சேர்த்து பொரிந்த பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிய பிறகு, ஒரு கொத்து கருவேப்பிலை ஒன்றரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பின், ஒரு பெரிய தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளியும் நன்றாக வதங்கிய பிறகு ஒரு டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள். அதன் பிறகு இரண்டு உருளைக்கிழங்கை தோலுரித்து மீடியம் சைஸில் நறுக்கி அதையும் இத்துடன் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள்.

இந்த மசாலாக்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் ஊற வேண்டும். ஆகையால் ரெண்டு அல்லது மூன்று நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இந்த நேரத்தில் இந்த குருமாவுக்கு ஒரு மசாலாவை தயார் செய்து விடுவோம். அதற்கு மிக்ஸி ஜாரில் கால் கப் தேங்காய், ஐந்து முந்திரிப்பருப்பு, கால் டீஸ்பூன் சோம்பு இவை அனைத்தையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து அதையும் உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் ஒன்றாக கலந்த பிறகு குருமாவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு குக்கர் விசில் போட்டு மூன்று விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். குக்கர் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு குக்கரின் மூடி திறந்து கொஞ்சமாக கொத்தமல்லியை தூவி கலந்து பரிமாறினால் அட்டகாசமான கறி குழம்பு சுவையில் உருளைக்கிழங்கு குருமா தயார்.

இதையும் படிக்கலாமே: மணக்க மணக்க அரிசி உப்புமாவை இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க அப்படியே நம்ம பாட்டி காலத்தில் செஞ்சு சாப்பிட்ட அதே சுவை மணத்துடன் அவங்களே செய்த மாதிரி இருக்கும்.

ரொம்ப ஈஸியான இந்த உருளைக்கிழங்கு குருமாவை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இதோட டேஸ்ட் உங்களை மறுபடி மறுபடி செய்ய தூண்டும்.

- Advertisement -