வீட்டில் எப்போதுமே தண்ணீர் ஊற்றி பூக்களை போட்டு வைத்திருக்கும் இந்த உருளி ஒரு சில நாட்களில் கருக்கத் தொடங்கி விடும். அந்த உருளியை மிக மிக எளிமையான முறையில் எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றிய பயனுள்ள ஒரு வீட்டு குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்பு வெறும் உருலிக்கு மட்டுமல்ல. நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பித்தளை பாத்திரம், செம்பு பாத்திரம், வெண்கல பாத்திரத்திற்கு கூட உபயோகமாக இருக்கும். சில பேர் வீட்டில் இந்த ஊரிளியை வெண்கலத்தில் பித்தளையில் செம்பில் வைத்திருப்பார்கள் அல்லவா. கருத்துப் போன இப்படிப்பட்ட பாத்திரங்களை கை வலிக்காமல், ஸ்கரப் நார் இல்லாமல், பீதாம்பரி சபீனா போன்ற எந்த பொருட்களும் இல்லாமல் மிக மிக எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுத்தம் செய்வது எப்படி.
நீங்க எந்த பாத்திரத்தை சுத்தம் செய்யப் போறீங்களோ, அந்த பாத்திரம் மூழ்கும் அளவிற்கு ஒரு பெரிய டப் அல்லது அன்னக்கூடையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீரில் 1 எலுமிச்சம் பழச்சாறு, உப்பு 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து கலந்து இந்த தண்ணீரில் கழுவ வேண்டிய பாத்திரத்தை போட்டு 7 லிருந்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இப்படி இந்த தண்ணீரில் ஊறும்போதே உங்கள் வீட்டில் கருத்துப் போன பாத்திரத்தில் இருக்கக்கூடிய அந்தக் கறைகள் எல்லாம் ஓரளவுக்கு நீங்கி இருக்கும். இப்போது இந்த பாத்திரத்திற்கு மேலே புளி கரைசலை தடவ வேண்டும். சிறிதளவு புளியை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து திக்கான பேஸ்ட்டாக தயார் செய்து பாருங்கள் மேலே தடவிக் கொள்ளுங்கள். கூடவே இதில் தேவையான அளவு அரிசி மாவு பொடியை தூவி, தேய்க்க வேண்டியதுதான். வெறும் கையைக் கொண்டு புளியையும் அரிசி மாவையும் வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் வெண்கல, பித்தளை, செம்பு பாத்திரத்தை தேய்க்கும் போது அது ரொம்ப ரொம்ப சுலபமாக வெள்ளையாக மாறும்.
உங்க வீட்டில் இருக்கும் பித்தளை செம்பு வெண்கல பாத்திரம் ரொம்ப ரொம்ப கருப்பாகிவிட்டது. நீண்ட நாட்களாக பயன்படுத்தவில்லை என்றால் இதோடு கொஞ்சம் உப்பு தூளையும் சேர்த்து தேய்க்கும் போது நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் வெறும் புளி, உப்பு, சாம்பல் இந்த மூன்று பொருட்களை வைத்து தான் இப்படிப்பட்ட பாத்திரங்களை சுத்தம் செய்து வந்தார்கள். இப்போதுதான் நிறைய கெமிக்கல் கலந்த பவுடரை நாம் பயன்படுத்துகின்றோம்.
கெமிக்கல் கலந்த பொடியை பயன்படுத்தும் போது சில பேருக்கு கையில் அலர்ஜி ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மேல் சொன்ன குறிப்பை பின்பற்றி பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை செம்பு வெண்கல பாத்திரங்கள் எல்லாமே நொடிப் பொழுதில் ஜொலி ஜொலிப்பை கொடுத்து விடும்.
இதையும் படிக்கலாமே: டக்குனு 10 நிமிஷத்துல ஏதாவது ஸ்வீட் செய்யணுமா? அப்படின்னா ஆரோக்கியம் தரும் இந்த கோதுமை பாயாசத்தை செய்யுங்க. சூப்பரான டேஸ்ட்ங்க.
தண்ணீரில் கழுவிய பாத்திரத்தை உடனடியாக ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து விடுங்கள். நன்றாக காய்ந்த இந்த பாத்திரத்திற்கு மேலே லேசாக விபூதியை தூவி, உங்கள் கையை வைத்து துடைத்தால், மிச்சம் மீதம் இருக்கும் கருப்பு எல்லாம் உங்கள் கையோடு ஒட்டி வந்துவிடும். உங்களுடைய பாத்திரங்கள் தங்கம் போல பளபளப்பாக ஜொலிக்க தொடங்கி விடும். உங்களுக்கு இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.