உங்க வீட்ல உருளியை இதில் வைத்து பாருங்கள்! உறவுகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் குறையும். ஒற்றுமையின் பலம் அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷத்திற்கு ஒரு துளி கூட குறை இருக்காது.

உருளி என்பது அழகுக்காக வைக்கப்படும் பொருள் மட்டுமல்ல. வாஸ்து ரீதியாக அது நமக்கு பல நன்மைகளை தருகின்றது. பல கடைகளில் பல வீடுகளில், இந்த உருளியில், தண்ணீர் ஊற்றி பூக்கள் போட்டு அலங்காரம் செய்து வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். பல நன்மைகளை நமக்கு தரக்கூடிய இந்த உறுளியை நம்முடைய வீட்டில் எப்படி வைத்தால், அதன் பலனை மேலும் அதிகமாக பெறமுடியும் என்பதை பற்றியும், நம்முடைய வீட்டில் ஒற்றுமை அதிகரித்து, நேர்மறை ஆற்றல் அதிகரித்து, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க, எந்த உருளையை வாங்கி வைக்க வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

uruli

பொதுவாக உருளையை பித்தளையில் தான் எல்லோரும் வாங்கி வைப்பார்கள். ஆனால் பித்தளையை விட, நம் வீட்டில் மண் உருளியை பயன்படுத்துவது மிகவும் நல்லது. மண்ணினால் செய்யப்பட்ட உருளியில் நீங்கள் தண்ணீரை ஊற்றி வைக்கும் போது, அந்த தண்ணீர் குளிர்ச்சியடையும். குளிர்ச்சி அடைந்த தண்ணீர் உங்களுடைய வீட்டின் நடுவே இருக்கும் போது, வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும். அந்த குளிர்ந்த தண்ணீரில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் வீட்டில் இருப்பவர்களுடைய கோபத்தை கட்டாயம் தணிக்கும்.

ஒரு மண் உருளியை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் தண்ணீரை ஊற்றி விடுங்கள். அந்த தண்ணீரில் ஒரு சொட்டு மஞ்சள், ஒரு சொட்டு குங்குமம், வாசனை நிறைந்த பூக்கள், மற்றும் மரிக்கொழுந்து கிடைத்தால் அந்த மரிக்கொழுந்தை வாங்கி இந்த தண்ணீரில் போட்டு வைப்பது மிகவும் நல்லது. அரை ஸ்பூன் அளவு சோப்பையும் அந்த தண்ணீரில் போடலாம். வாடிய பூக்களை தினம்தோறும் மாற்றங்கள். மரிக்கொழுந்து தண்ணீரில் இருக்கும்போது சீக்கிரமாக வாடாது. மரிக்கொழுந்தே மட்டும் வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். கட்டாயம் உருளியில் இருக்கும் தண்ணீரை தினம்தோறும் மாற்றுவது தான் நல்ல பழக்கம். தினந்தோறும் மாற்றித்தான் ஆக வேண்டும்.

uruli1

குளிர்ந்த தண்ணீரோடு நறுமணம் நிறைந்த மரிக்கொழுந்து சேரும்போது உங்களுடைய வீடு முழுவதும் இந்த வாசனை பரவியிருக்கும். வீட்டில் உள்ளவர்களின் மனநிலைமை சண்டை போடும் அளவிற்கு இருந்தால் கூட, அதை தணிக்கக் கூடிய சக்தி இந்த குளிர்ந்த தண்ணீருக்கு உண்டு என்று கூட சொல்லலாம். கணவன்-மனைவிக்குள் சண்டை, பிள்ளைகளுக்கும் சண்டை, மாமியார் மருமகள் சண்டை இப்படிப்பட்ட பெரிய பெரிய பிரச்சனைகளுக்கான தீர்வை கூட இந்த ஒரு மண் உருளி கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

- Advertisement -

இதற்காக பெரியதாக பணம் காசு ஒன்றும் செலவழிக்கப் போவது இல்லை. உங்களுடைய வீட்டில் நிம்மதி நிலவும் போது அமைதி நிலவும் போது, மகாலட்சுமியும் வந்து வாசம் செய்ய தொடங்கி விடுவாள். பிரச்சனையில் பாதி முடிந்ததா? வீடு பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். இந்த ஊரிளியை பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும். நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும். பல நன்மைகளை கொடுக்கக்கூடிய இந்த ஒரு உருளி வாங்கி வைக்க சிரமம் பார்க்காதீர்கள்.

marikozhunthu

வாசனை மிகுந்த, விலை உயர்ந்த பொருட்களுக்கு ஈடானது, இந்த மரிக்கொழுந்து. 10 நாள் தொடர்ந்து உங்கள் வீட்டு உருளியில் இந்த மரிக்கொழுந்தை போட்டு தான் பாருங்களேன்! குட் வைப்ரேஷனை உணர்வீர்கள். முடிந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு கூட இந்த மரிக்கொழுந்தை அணிவிக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது. பஞ்ச பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் சிறிது மரிக்கொழுந்து போட்டு வைத்தாலும் நல்லதுதான். இவ்வாறாக வாசனை நிறைந்த, கண்களுக்கு குளிர்ச்சி நிறைந்த நேர்மறை ஆற்றல் அளிக்கக் கூடிய விஷயங்களை வீட்டில் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். நிம்மதி நிலைத்திருக்கும், சந்தோஷத்திற்கு ஒரு துளிகூட குறை இருக்காது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கண் திருஷ்டி காணாமல் போவதை உங்கள் கண்களால் காண வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.