பணத் தடையை அகற்றும் மீந்து போன விளக்கில் இருக்கும் எண்ணெய்! அதை எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

vilakku-cash
- Advertisement -

ஒரு குடும்பத்தில் சுபீட்சம் நிலைத்து இருக்க கண்டிப்பாக வாரம் ஒரு முறையேனும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படும் அதிர்ஷ்டம் ஆயினும், துரதிர்ஷ்டம் ஆயினும் அது நீங்கள் உங்கள் இல்லத்தை வைத்திருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது என்பதில் மாற்றமில்லை! விளக்கில் இருக்கும் மீந்து போன எண்ணெயை பலரும் வீணடிக்கின்றனர். விளக்கில் இருக்கும் எண்ணெய் மற்றும் திரி ஆகியவற்றை எப்படி பயன்படுத்தினால் நன்மைகள் உண்டாகும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

சுபீட்சம் நிலைத்திருக்க நாம் தினமும் காலையிலும், மாலையிலும் பூஜை அறையில் ஒரு விளக்கையாவது ஏற்றி வைக்க வேண்டும். இப்படி விளக்கு ஏற்றும் பொழுது அதிக நேரம் விளக்கை எரிய விட கூடாது என்பது நியதி. இதனால் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுதே அதை புஷ்பத்தால் நாம் குளிர்விக்க செய்கிறோம். இப்படி குளிர்விக்கும் பொழுது விளக்கில் இருக்கும் மீந்து போன எண்ணெய் அப்படியே இருக்கும். இதை ஒரு நாளைக்கு மேல் அப்படியே விளக்கில் விட்டு விடக்கூடாது. இதனால் விளக்கில் பச்சை நிற பாசி போல் பிடிக்க ஆரம்பித்துவிடும். இது வீட்டிற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பதால் இதனை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

அந்த எண்ணெயை தனியாக ஒரு சிறு பாட்டிலில் எடுத்து வைத்து வாருங்கள். எப்போதும் நாம் உறங்கும் முன்பு சமையலறையை கொஞ்சம் கூட குப்பைகள் இல்லாமல் சுத்தமாக க்ளீன் செய்து வைத்திருக்க வேண்டும். எச்சில் பாத்திரங்களை இரவே எவ்வளவு நேரம் ஆனாலும் கழுவிக் கவிழ்த்து வைத்து விட வேண்டும். அடுப்பங்கரை மேடை, அடுப்பு ஆகியவற்றை சுத்தம் செய்து வைத்து விட்டு தான் உறங்கச் செல்ல வேண்டும். அப்போது தான் அந்த இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நீங்கள் உங்கள் உள்ளங்கையை பார்த்து எழுந்து வாசல் கதவை திறந்து வாயைக் கொப்பளித்துவிட்டு, முகம், கை, கால்களை அலம்பி விட்டு கோலம் போட வேண்டும். கோலம் போட்டு முடித்த பின்பு தலைவாசல் தீபம் ஏற்றுபவர்கள் அந்த தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். தலைவாசல் தீபத்தை ஏற்றும் பொழுது இந்த விளக்கில் இருக்கும் மீந்து போன எண்ணெயை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் அடுப்பங்கரையில் ஒரு சிறு அகல் விளக்கு ஒன்றை வைத்து, இந்த எண்ணெயை அதில் ஊற்றி புதிய திரி போட்டு தீபம் ஏற்றி வைக்கலாம். காலையில் அடுப்பங்கரையில் ஏற்றும் தீபத்திற்கு அதீத சக்தி உண்டு. இது உங்களுக்கு வறுமை இல்லாத நல்லதொரு சுபீட்சமான வாழ்கையையும் உண்டாக்கி தரும். அன்னபூரணியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு இம்முறையை கையாளலாம்.

- Advertisement -

மீந்து போன எண்ணெய் அதிகமாக உங்களிடம் இருந்தால், நீங்கள் உருளி வைத்திருக்கும் இடத்திலும் இந்த எண்ணெயை பயன்படுத்தி ஒரு தீபம் ஏற்றி வைக்கலாம். பெரிய பெரிய வணிக வளாகங்களில் கூட உருளி வைப்பதை பார்த்து இருப்போம். உருளி என்பது நமக்கு அதிர்ஷ்டத்தை இழுத்துக் கொண்டு வரக்கூடிய ஒரு அற்புத பரிகாரமாக இருந்து வருகிறது. ஒரு பெரிய அளவிலான உருளியில் வாசம் மிகுந்த மலர்களைக் எப்போதும் வைத்திருந்தால் அதில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல் பணவரவை அதிகரிக்க செய்யும்.

இதனால் தான் கடை, வியாபார இடங்களில் இவ்வாறு உருளி வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இதை நாம் வீட்டிலும் கூட செய்யலாம். அந்த உருளியின் அருகே விளக்கு ஏற்றி வைத்தாலும், தெய்வங்களின் அருள் கிடைக்கும். அதே போல திரியை எப்பொழுதும் பயன்படுத்திவிட்டு வீணடிக்கக் கூடாது. தீபத்திரி மீதமிருந்தால் அதை வாரம் ஒருமுறை நீங்கள் சாம்பிராணி புகையுடன் போட்டு எரித்து விடலாம். இதனால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் ஒழியும்.

- Advertisement -