நீங்கள் சமையல் செய்யும் இடமான கிச்சனை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பணத்தை மிச்சப்படுத்தவும் இந்த 5 குறிப்புகளை மட்டும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

oil
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் கூடம், சமையலறை, படுக்கையறை, பாத்ரூம் என பல அறைகள் இருந்தாலும் அதிகம் புழக்கத்தில் இருப்பது சமையலறை மட்டும் தான். காலையிலிருந்து இரவு படுக்கும் வரை பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் இடமும் சமையலறை தான். மனிதன் என்பவன் மூன்று வேளை உணவு அருந்தினால் மட்டுமே அவனது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே வீட்டின் மிகவும் முக்கியமான இடமான இந்த சமையலறையை சுத்தமாக வைத்திருப்பதும், அங்கே சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வீணாகாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியமான ஒரு விஷயமாகும். இதற்காக ஒரு சில எளிமையான குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொண்டால் போதும். வாருங்கள் அவை என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

kitchen1

குறிப்பு: 1
பலரது வீட்டிலும் ரேஷன் கடையில் போடப்படும் பாமாயிலை தான் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் மற்ற ஆயிலை போல் இந்த பாமாயிலை நேரடியாக பயன்படுத்த கூடாது. இதனால் உணவு ஜீரணம் ஆவதில் பிரச்சனை, பித்தம் நெஞ்சுக்கரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

- Advertisement -

இதனை தவிர்ப்பதற்காக அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, பாமாயிலை முழுவதுமாக கடாயில் ஊற்றி, எண்ணெயை நன்றாக காய வைக்க வேண்டும். பின்னர் எலுமிச்சை பழ அளவு புளியை எடுத்துக் கொண்டு அதனுள் ஒரு சிட்டிகை கல் உப்பை வைத்து நன்றாக அழுத்திக் கொள்ள வேண்டும். பிறகு இந்த புளி உருண்டையை பாமாயிலில் சேர்த்து நன்றாகக் பொரிக்க வேண்டும். அதன்பின் இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன் படுத்திக் கொண்டால் அஜீரண பிரச்சனை, பித்த பிரச்சனை ஏற்படாது.

fenugreek-oil

குறிப்பு: 2
வீட்டில் லெமன் ஜூஸ் அல்லது லெமன் சாதம் செய்தால் எலுமிச்சை பழத்தோல் அதிகமாக இருக்கும். இதனை வீணாக கீழே தூக்கி எறியாமல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதனுடன் எலுமிச்சம் பழத்தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். கொதித்த தண்ணீரில் இருந்து சிறிதளவு எடுத்துக்கொண்டு, அரை ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து அதில் பல் துலக்கும் பிரஷ்களை ஊற வைத்து, சுத்தம் செய்தால் பிரஷ்ஷில் இருக்கும் அனைத்து விதமான அழுக்குகளும் சுத்தமாகிவிடும்.

- Advertisement -

குறிப்பு: 3
பின்னர் இந்த தண்ணீரை ஆறவைத்து, அதனுடன் சிறிதளவு சோடா உப்பை சேர்த்து, ஸ்பிரே பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால், கிச்சனில் இருக்கும் விடாப்பிடியான பிசுக்களின் மீது தெளித்து, சுத்தம் செய்து வந்தால் எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

குறிப்பு: 4
கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் லைட்டரில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை தண்ணீர் படாமல் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். அதற்காக நெயில் பாலிஷ் கிளீனரை சிறிதளவு ஒரு துணியில் சேர்த்து, அந்த துணியை வைத்து லைட்டரை கிடைக்கும் பொழுது எண்ணெய் பிக்குகள் சுத்தமாகிவிடும்.

wheat-flour

குறிப்பு: 5
வீட்டில் அரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவில் சீக்கிரமாக வண்டுகள் பிடித்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக பிரியாணி இலையை இரண்டு துண்டாக பிய்த்துக் கொண்டு அதனுடன் ஒரு சிறிய துண்டு சுக்கையும் சேர்த்து கோதுமை மாவினுள் வைத்துவிட்டால் வண்டுகள் வராமலிருக்கும். அவ்வாறு கடலைப்பருப்பிலும் வண்டு வராமல் இருக்க பிரியாணி இலையுடன் ஒரு வரமிளகாய் சேர்த்து வைத்து விட்டால் போதும்.

- Advertisement -