இந்த ஐந்து கிச்சன் குறிப்புகளை மட்டும் தெரிந்து கொண்டால் உங்கள் சமையலும் மணமணக்கும் உங்கள் வீட்டு கிச்சனும் பளபளக்கும்

kitchen
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் அதிகம் பயனுள்ள இடம் எதுவென்றால் சமையல் அறை தான். காலை முதல் இரவு வரை இந்த சமையல் அறையில் தான் அனைவருக்கும் தேவையான உணவு சமைக்கப்படுகிறது. டீ போடுவதில் இருந்து இரவு உண்ணும் உணவு வரை அனைத்துவிதமான உணவுகளையும் சமைப்பதற்கு ஒரு நாளைக்கு 10 மணி நேரமாவது இந்த சமையலறையில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே அங்கு சமைக்கப்படும் உணவுகள் சுவையாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சமையலறை மிகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் .இவை இரண்டிற்கும் ஏற்றவாறு பயனுள்ள கிச்சன் குறிப்புகளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் அவை என்னென்ன என்று பார்ப்போம்.

குறிப்பு: 1
பலரது வீட்டிலும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அடிக்கடி செய்யும் ஒரு குழம்பு என்னவென்றால் சாம்பார் தான். சாம்பார் செய்வதற்கு பெருமளவில் தேவைப்படுவது பருப்பு தான். இந்த பருப்பு வகைகளை டப்பாவில் போட்டு வைத்தால் சில நாட்களிலேயே வண்டு பிடித்துவிடுகிறது. இது போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட புதியதாக வாங்கி வரும் பருப்பை கடாயில் சேர்த்து சிறிது நேரம் லேசாக சூடுபடுத்தி, அதன் பின்னர் டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 2
சமையலறையில் ஃபேன், லைட் போடுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்விட்சுகள் மிகவும் அழுக்காக தான் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் சமையல் செய்யும் போது மிக்சி போடுவதற்கும், லைட் போடுவதற்கும் அல்லது எக்ஸாம் ஃபேன் போடுவதற்கும் அதே கையை பயன்படுத்தி சுவிட்சை அழுத்துவதால் அதில் எண்ணெய் கரை அதிகமாக பிடித்துக் கொள்கின்றது.

என்னதான் சோப் வாட்டர் வைத்து தேய்த்தாலும் இந்த கரைகளை முழுவதுமாக போவதில்லை. இதற்கு சிறிதளவு வினிகரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அதனை ஒரு சிறிய துணியில் நனைத்து சுவிட்சில் தேய்த்து சிறிது, நேரம் ஊற வைத்து, பின்னர் அழுத்தமாக துடைத்து எடுத்தால் கரை முழுவதும் அகன்று விடும்.

- Advertisement -

குறிப்பு: 3
அசைவ உணவுகளை சமைக்கின்ற போது அதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களை என்னதான் டிஷ்வாஷ் வைத்து தேய்த்து துலக்கினாலும் அதில் அசைவ வாசனை முழுவதுமாக நீங்குவது கிடையாது. எனவே இதனை முழுமையாக அகற்ற நாம் குழம்பிற்க்கு சேர்த்த புளிக்கரைசலில் மீதியான புளியை முழுவதுமாக இந்த பாத்திரத்தில் தேய்த்து அதன் பின்னர் டிஷ்வாஷ் வைத்து துலக்கினால் அசைவ வாசனை சிறிதும் இல்லாமல் போய்விடும்.

குறிப்பு: 4
பெரும்பாலும் இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள அனைவரது வீட்டிலும் வெஜிடபிள் குருமா செய்யப்படுகிறது. என்ன தான் பக்குவமாக சமைத்தாலும் ஹோட்டல்களில் செய்யப்படும் அந்த சுவையும், மணமும் வீட்டில் செய்யும் வெஜிடபிள் குருமாவில் வருவதில்லை.

இதற்கு எப்பொழுதும் போல காய்கறிகள் சேர்த்து தாளித்து, குருமாவை இருக்குகின்ற நேரத்தில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி அதாவது காய்ந்த வெந்தயக்கீரை இதனை ஒரு உள்ளங்கையில் எடுத்து கசக்கி சேர்த்தால் போதும். உங்கள் குருமா ஹோட்டல் குருமா போன்றும் மணமணக்கும் சுவையில் இருக்கும்.

குறிப்பு: 5
உருளைக்கிழங்கு பொறியியல் செய்வதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்து செய்யவேண்டும். பெரும்பாலும் உருளைக்கிழங்கை இரண்டாக அரிந்து வேக வைக்கும் பொழுது அதில் நீர் கோர்த்துக் கொள்கிறது. எனவே சமைக்கும்போது அதிக அளவில் சொதசொதவென்று இருக்கும். எனவே உருளைக்கிழங்கை முழுவதுமாக அப்படியே வேக வைத்து அதன் மேல்புறம் மட்டும் லேசாக கத்தி வைத்து கீறி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உருளைக்கிழங்கில் நீர் கோர்க்காமல் இருக்கும். இதன் மூலம் செய்கின்ற உருளைகிழங்கு வறுவல், கட்லெட் போன்றவை அளவான பதத்தில் இருக்கும்.

- Advertisement -