என்னதான் சமையலில் ஜாம்பவானாக இருந்தாலும், இந்த சின்ன சின்ன குறிப்புகள் தெரிந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் கிச்சனின் சூப்பர் ஸ்டாராக முடியும்

kitchen
- Advertisement -

ஒவ்வொரு நாளும் காலை ஆரம்பித்து இரவு வரை சமையல் செய்வதற்காகவே பெண்களின் நேரம் அனைத்தும் செலவாகி கொண்டிருக்கிறது. இவ்வாறு பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், வேலைகளை சுலபமாக்கவும் சில குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொண்டால் போதும். சமைப்பது என்பது பெரிய விஷயமாக பலருக்கும் தோன்றும். ஆனால் சமயலை எப்படி குறைந்த நேரத்தில் செய்ய வேண்டும், என்னென்ன வேலைகளை எப்படி செய்தால் சமையல் வேலை சீக்கிரம் முடியும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுபோல சமையலறையில் வீணாகும் பொருட்களை எப்படி உபயோகம் உள்ளதாக மாற்ற வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உங்களுக்கும் பயன்படக் கூடிய சின்ன சின்ன குறிப்புகளை பற்றி தான் இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குறிப்பு: 1
ஒவ்வொரு வீட்டிலும் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அடிக்கடி செய்யும் ஒரு பதார்த்தம் அப்பள வருவல் தான். இந்த அப்பளத்தை புதியதாக வாங்கி வந்து அப்படியே பொரித்துக் கொடுத்தால் அதில் நிறைய மாவுகள் ஒட்டிக் கொண்டிருக்கும். எனவே அப்பளத்தின் சுவை வேறுபடும். ஆகவே அப்பளத்தின் மேலுள்ள வெள்ளை நிற மாவை துணி வைத்து துடைத்து விட்டு அதன் பிறகு பொரித்தால் நல்ல சுவையுடன் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 2
அரளிப் பூவை காலையில் பறித்து விட்டு அதனை கட்டுவதற்கு நேரம் இல்லாமல் போய்விடும். ஆனால் இந்த மலர் சிறிது நேரத்தில் வதங்க ஆரம்பித்துவிடும். ஆகவே மறைத்து வைத்த உடனேயே அதன் மீது லேசாக தண்ணீர் தெளித்து வைத்து விட்டால் போதும். எத்தனை மணி நேரம் ஆனாலும் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

குறிப்பு: 3
இட்லி மாவு அரைப்பதற்கு உளுந்து ஊற வைக்கும் பொழுது, ஊற வைத்த உளுந்தை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, அதன் பிறகு அதனை அரைத்துப் பாருங்கள். அதிகப்படியான உப்பரி கொடுக்கும். இதனால் இட்லியும் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும். சீக்கிரத்தில் மாவு புளித்துப் போகாது.

- Advertisement -

குறிப்பு: 4
இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி வைக்கும் பொழுது அடிப்புறத்தில் வைக்கப்படும் இட்லி தட்டில் உள்ள இட்லிகள் மட்டும் நீர் கோர்த்து சொதசொதவென்று இருக்கும். இதனை தவிர்க்க இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து விட்டு தண்ணீர் கொதித்த பிறகு இட்லி தட்டில் இட்லி ஊற்றி வைக்க வேண்டும். அப்பொழுது மூடி போட்டு, மூடி வைத்து, 2 நிமிடம் கழித்து மற்றொரு இட்லித் தட்டில் இட்லி ஊற்றி அதன் மீது வைத்துவிட, இட்லி தண்ணீர் கோர்க்காமல் சாஃப்ட்டாக வந்துவிடும்.

குறிப்பு: 5
சிலநேரம் கத்தரிக்காய் பொரியல் செய்வதற்கு கத்தரிக்காயை அறிந்து வைத்துவிட்டு, அதனை சமைப்பதற்கு நேர தாமதமாகி விட்டால் கத்தரிக்காய் அனைத்தும் கருப்பு நிறத்தில் மாறிவிடும். இதனை தவிர்ப்பதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, அதனுடன் மூன்று ஸ்பூன் மோர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கி வைத்த கத்தரிக்காயை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்து அதனுடன் மூன்று ஸ்பூன் மோர் கலந்து விட்டால் போதும். எவ்வளவு நேரமானாலும் கத்தரிக்காய் கருமை நிறத்தில் மாறாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -