வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க நாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் இந்த பொருட்கள் இருந்தாலே போதும். இந்தப் பொருள்களில் இவ்வளவு பயன்கள் இருக்கா இதுவரைக்கும் தெரியம்மா போச்சே!

- Advertisement -

வீட்டில் பயன்படுத்தும் பல பொருட்களில் அதன் பயன்பாடு முடிந்த பிறகு அதை வேறொரு பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம். எப்படி நாம் சமைக்க பயன்படுத்திய காய்கறிகளின் கழிவுகள் ஒரு நல்ல உரமாக பயன்படுகிறதல்லவா, அதே போல் தான் தினமும் பூஜைக்கு பயன்படுத்தி பூக்களை காய்ந்த பிறகு தூக்கி தூர போட்டு விடுவோம். அதை அப்படியே சேகரித்து வைத்தால் அதைக் கொண்டு வீட்டை நல்ல நறுமணம் ஆக்கக் கூடிய ஒரு பொருளை தயாரிக்க முடியும். அது எப்படி என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டை நறுமணமாக வைத்திருக்க வேண்டும் என்று எல்லோருமே நினைக்கக் கூடிய ஒன்று தான். இதற்காக நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து வாசனை திரவியங்களை வாங்கி பயன்படுத்துவோம். இனி அப்படி செய்யாமல் நம் வீட்டில் பயன்படுத்திய பிறகு தூக்கி தூரப் போடும் காய்ந்து போன பூக்களையும், வேர்க்கடலை தோல் இவைகளை வைத்து அருமையான ஒரு வாசனை பொருளை தயாரிக்க முடியும் அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு காய்ந்து போன பூக்களை நிழலில் உலர்த்தி கைகளில் தொட்டால் பூ உடைந்து விட வேண்டும். அந்த அளவிற்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் வேர்க்கடலையை எடுத்த பிறகு இருக்கும் மீதமுள்ள தோலை காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். இதற்கு அவிழ்த்த வேர்க்கடலை, பச்சை வேர்க்கடலை இரண்டின் தோலையும் பயன்படுத்தலாம்.

இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே ஒரு தட்டில் கொட்டிய பிறகு மூன்று கற்பூரத்தை எடுத்து நன்றாக பொடி செய்து இந்த பவுரடரில் சேர்த்த பிறகு சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்று சேர்த்து கொள்ளுங்கள். பூக்கள் காய்ந்து போனாலும் வாசனையுடன் தான் இருக்கும். மேலும் இத்துடன் வாசனைக்கு கொஞ்சமாக ஜவ்வாதை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இதை அகலில் ஒரு உருண்டை எடுத்து வைத்து இத்துடன் பிரியாணி இலையை பற்ற வைத்து இதில் இதில் போட்டு விடுங்கள். உங்கள் வீட்டில் தாசாங்கம், கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவை இருந்தால் சேர்க்கலாம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இதுவே வீடு முழுவதும் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அட! பத்து ரூபா பேஸ்ட்டை வெச்சி இவ்வளவு விஷயங்களை செய்யலாமா? இது தெரியாம ஒவ்வொன்னத்துக்கும் இவ்வளவு காசு செலவு பண்ணிட்டோமே.

வீணாக தூக்கி போடும் பொருட்களை வைத்து இவ்வளவு பயன்கள் உண்டு. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -