இதுவரை எங்கேயும் கேள்விப்படாத, டாப்பு டக்கர் ஐடியா! வீட்டு வேலைகளை ஜம்முனு முடிக்க இந்த டிப்ஸை எல்லாம் இத்தனை நாட்கள் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே.

puli
- Advertisement -

சில வேலைகளை எல்லாம் நாம் எவ்வளவுதான் யோசித்தாலும் அதை சுலபமாகவும் அழகாகவும் செய்து முடிக்க முடியாது. அந்த வகையில் இல்லத்தரசிகளுக்கு சமையலறையில், பூஜை அறையில் வீட்டில் கஷ்டமான வேலைகளை எளிமையாக்க கூடிய பயனுள்ள சில வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்புகளை படிச்சு பாருங்க. இதுல இருக்கிற எல்லாமே புதுசு அதேசமயம் அடிக்கடி நம்முடைய வீட்டிற்கு தேவையான குறிப்புகளும் கூட. வாங்க நேரத்தை கடத்தாமல் பதிவிற்குள் செல்வோம்.

Tip 1:
தினமும் புளியிலிருந்து, புளிக்கரைசல் எடுப்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய வேலை. அவசரம் அவசரமாக சமைக்கும்போது இதற்கு தனியாக நேரம் செலவழிக்க முடியாது. கொஞ்சம் புளியை தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். அது லேசாக ஊறினால் போதும். கொட்டைகள் ஓடுகள் இல்லாமல் சுத்தம் செய்த புளியாக இருக்கட்டும். தண்ணீரில் ஊற வைத்த இந்த பளியை மிக்ஸி ஜாரில் போட்டு 2 ஓட்டு ஓட்டினால் சூப்பரான புளி கரைசல் உங்களுக்கு கிடைத்துவிடும். பிறகு இதை வடிகட்டி திக்கான புளிப்பேஸ்டாக எடுக்கலாம். இந்த பேஸ்ட்டை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். அல்லது இந்த கரைசலை ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கியூப்களாக தயார் செய்து எடுத்து ஒரு கண்டெய்னரில் போட்டும் நாம் பயன்படுத்தலாம்.

- Advertisement -

Tip 2:
பூஜை அறையில் பயன்படுத்தும் சந்தனத்தை எப்போதும் தண்ணீர் ஊற்றி தானே கலப்போம். ஆனால் அந்த சந்தனம் பார்ப்பதற்கு அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கவும், வாசமாக இருக்கவும், ஒரு ஐடியா உள்ளது. தேவையான அளவு சந்தனத்தை கிண்ணத்தில் போட்டு கொஞ்சமாக காய்ச்சாத பச்சை பால், ரோஸ் வாட்டர் ஊற்றி, கலந்தால் இந்த சந்தனத்தின் வாசமும் நிறமும் வேற லெவல்ல இருக்கும். இப்போது இதை பூஜைக்கு பயன்படுத்தலாம். நெற்றியில் இட்டுக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.

Tip 3:
பூஜையறையில் விளக்கு ஏற்றுவதற்காக நல்லெண்ணெய் தனியாக வைத்திருப்போம் அல்லவா. அந்த எண்ணெயில் கொஞ்சமாக ஜவ்வாது பொடி போட்டு நன்றாக குலுக்கி வைத்து விடுங்கள். இந்த எண்ணெயில் தீபம் ஏற்றும் போது உங்களுடைய வீடு காலை மாலை நேரத்தில் தெய்வீக கடாட்சத்துடன் இருக்கும்.

- Advertisement -

Tip 4:
காலிஃப்ளவர் சில்லி, பக்கோடா போட போறீங்களா. அப்போது காலிஃப்ளவரை சுடுதண்ணீரில் போட்டு எடுக்கக்கூடாது. சுடுதண்ணியில் போட்டு எடுத்த காலிபிளவரில் சில்லி பக்கோடா செய்தால், மொறுமொறுப்பாக வராது. அதிக எண்ணெய் குடிக்கும். பச்சை தண்ணீரில் காலிஃப்ளவரை போட்டு, கல் உப்பு, மஞ்சள் தூள் போட்டு, 15 நிமிடம் கழித்து எடுத்து நல்ல தண்ணீரில் அலம்பி அதை பக்கோடா செய்ய பயன்படுத்தி பாருங்கள். துளி கூட எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுப்பாக சூப்பராக வரும்.

Tip 5:
வீட்டில் கண்ணாடி பாட்டிலை பயன்படுத்த பயமாக உள்ளதா. வீட்டில் இருக்கும் கண்ணாடி பாட்டிலுக்கு சாக்ஸ் போட்டு விடுங்கள். சின்ன சின்ன குழந்தைகளுக்கு காலில் போடும் சாக்ஸ் உங்கள் வீட்டில் இருந்தால் அதை இந்த பாட்டிலில் மாட்டி விடுங்கள். கண்ணாடி பாட்டில் ஒன்றோடு ஒன்று உறசி உடையாது. கண்ணாடி பாட்டில் கீழே விழுந்து உடைந்தாலும் பெருசாக உங்களுக்கு காயம் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: வாங்கி வந்த மாம்பழம் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்க, இப்படி ஒரு ஐடியாவை எங்கு தேடினாலும் கிடைக்காது.

Tip 6:
உங்க வீட்டு பிரிட்ஜில் எப்போதும் துர்நாற்றம் வீசுமா. ஒரு வெள்ளை காகிதத்தில் கொஞ்சமாக எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி, கசக்கி அந்த பேப்பரை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஃப்ரிட்ஜில் ஏதாவது ஓரத்தில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை எல்லாம் இந்த வெள்ளை காகிதம் ஈர்த்துக் கொள்ளும். ஒரு நாள் கழித்து பிறகு அதை எடுத்து வெளியில் போட்டு விடலாம்.

- Advertisement -