காலியாக இருக்கும் வீடு, கடைக்கு ஆட்கள் வர பரிகாரம்

nandi pariharam for rent
- Advertisement -

ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு வேலையையும் சேர்த்து செய்து அதன் மூலம் பண வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவோம். அப்படி ஆசைப்படுபவர்களின் பலரும் தங்களுடைய காலியான இடத்தில் வீடோ, கடையோ கட்டி வாடகைக்கு விட்டு அந்த வாடகை காசை வைத்து பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் வாடகைக்கு ஆட்களே வராமல் காலியாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த சிறிய பரிகாரத்தை செய்தால் விரைவிலயே நல்ல நபர்களாக வாடகைக்கு வருவார்கள். அந்த பரிகாரம் என்ன என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு பார்க்க போகிறோம்.

சொந்தமாக வீடு வைத்திருக்கும் நபர்கள் பலரும் கடன் வாங்கியாவது ஒரு இடம் வாங்கி அதில் வீடு அல்லது கடை கட்டியோ வாடகைக்கு விட்டால் அது நமக்கு ஒரு வருமானமாக இருக்குமே என்று நினைப்பார்கள். அதற்கான முயற்சிகளையும் செய்வார்கள். அந்த முயற்சிகளும் வெற்றி அடையும், ஆனால் அதில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால் நல்ல நபர்களாக வாடகைக்கு வர வேண்டும்.

- Advertisement -

அப்படி வந்த நபர்கள் முறையாக வாடகையை தர வேண்டும். பல வீடுகள் மற்றும் கடைகளில் குடியிருக்கும் நபர்கள் முறையாக தங்களுடைய வாடகையை கொடுக்காமல் தாமதப்படுத்துவார்கள் அல்லது காலி செய்து போன பிறகு புதிதாக வேறு நபர்கள் யாருமே வாடகைக்கு வராமல் வீடோ கடையோ காலியாகவே இருக்கும். இதனால் அவர்கள் வாங்கிய கடனையும் அவர்களால் திருப்பி செலுத்த முடியாமல் அதே சமயம் வருமானமும் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரம்.

இந்த பரிகாரத்தை எந்த நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம். வீடோ கடையோ எது காலியாக இருக்கிறதோ அந்த இடத்தில் செய்ய வேண்டும். இதற்கு ஒரு கண்ணாடி கிண்ணம் ஒன்று வாங்க வேண்டும். அந்த கிண்ணத்திற்குள் வைப்பதற்கு ஏற்றவாறு பீங்கான் அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட நந்தி சிலையை வாங்க வேண்டும். இப்பொழுது அந்த கண்ணாடி கிண்ணத்திற்குள் நந்தி சிலையை வைத்து நந்தியின் மூக்கின் அளவு வரும் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். மூக்கிற்கு கீழ் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அதில் 5 மிளகை போட வேண்டும். இந்த கிண்ணத்தை அதாவது நந்தியின் முகம் வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். இப்படி காலியாக இருக்கும் வீடு அல்லது கடையின் வாசலில் அதாவது உள் நுழையும் இடத்தில் இந்த கிண்ணத்தை வைப்பதன் மூலம் காலியாக இருக்கும் வீடு மற்றும் கடைக்கு குடியிருக்க நல்ல ஆட்களாக வருவார்கள்.

இதில் இருக்கக்கூடிய தண்ணீர் மற்றும் மிளகை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தண்ணீரையும் மிளகையும் கால்படாத இடத்தில் அதாவது செடிகள் இருந்தால் அதில் ஊற்றிவிட்டுஊற்றிவிட்டு, நந்தி சிலையையும் கிண்ணத்தையும் சுத்தம் செய்துவிட்டு பிறகு புதிதாக மாற்றுங்கள்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த எளிமையான பரிகாரத்தை தங்கள் இல்லங்களில் செய்வதன் மூலம் நந்தி பகவானின் அருளால் விரைவிலேயே நல்ல நபர்கள் குடியிருக்க வருவார்கள்.

- Advertisement -